கர்நாடக மாநிலம் பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு தொடர்பாக, கோவை தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வரும் இரு மருத்துவர்களிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணையின் ஒரு பகுதியாக கோவை சாய்பாபா காலனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்களாக இருந்து வரும் இரண்டு மருத்துவர்களிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
கர்நாடக மாநில NIA அதிகாரிகளின் வேண்டுகோளின் பேரில் சென்னையில் இருந்து வந்த NIA அதிகாரிகள் கோவை போலீசார் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர்.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஜாபர் இக்பால், நயின் சாதிக் ஆகிய இருவரும் சாய்பாபா காலனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக இருந்து வருகின்றனர்.
அதில் நயின் சாதிக் இரண்டு ஆண்டுகள் பயிற்சி முடித்துள்ள நிலையில், ஜாபர் இக்பால் இரண்டாவது ஆண்டாக பயிற்சி பெற்று வருகிறார். இந்த நிலையில் இன்று காலை இவர்கள் தங்கி உள்ள இல்லங்களுக்கு சென்ற அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

கோவை போலீசார் உதவியுடன் சாய்பாபா காலனியில் சுப்பண்ண கவுண்டர் வீதி, நாராயண வீதி ஆகிய இடங்களில் சோதனை நடத்திய தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் ஒரு மணி சோதனைக்கு பின்னர் கிளம்பினர்.
தனியார் மருத்துவமனையிலும் இருவர் தொடர்பாக NIA அதிகாரிகள் விசாரணை நடத்தி சென்றனர். 2 மருத்துவர்கள் வீட்டில் NIA அதிகாரிகள் விசாரணை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.