கடலூர் மாவட்டம் பட்டாம்பாக்கம் அருகே இன்று காலை பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி வந்த தனியார் பேருந்து டயர் வெடித்து ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து திருவண்ணாமலையிலிருந்து கடலூர் நோக்கி வந்த பேருந்தில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் 4 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்த நிலையில் 7பேர் கவலைகிடமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் அருண் தம்ராஜ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் கடலூர் மாநகராட்சி மேயர் ராஜா சுந்தரி கடலூர் தலைமை அரசு மருத்துவமனையில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினர். அத்துடன் அவர்களுக்கு தீவிரே சிகிச்சை அளிக்கவும் மருத்தவர்களுக்கு அறிவுறுத்தினர்.
மேலும் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.