- டெல் அவிவ் காசாவில் ஹமாஸ் மீது இஸ்ரேல் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி நேற்று முன்தினம் நடந்த தாக்குதலில் ஹமாஸ் தலைவர் சின்வார் கொல்லப்பட்டார். இதற்கிடையே சின்வாரின் உடலில் நடந்த பிரேதப் பரிசோதனை முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. அதில் அவரது தலையில் குண்டு பாய்ந்ததும், ஆள்காட்டி விரல் வெட்டப்பட்டதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே மிகப் பெரிய போர் நடந்து வருவது அனைவருக்கும் தெரியும். கடந்தாண்டு அக். மாதம் தொடங்கிய இந்த போர் ஓராண்டிற்கும் மேலாகத் தொடர்கிறது. இதற்கிடையே நேற்று முன்தினம் ஹமாஸ் படைத் தலைவர் யாஹ்யா சின்வாரை இஸ்ரேல் படையினர் கொன்றனர். இது இஸ்ரேல் ஹமாஸ் போரில் மிக முக்கிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது. அது சின்வார் என்பது தெரியாமலே இஸ்ரேல் படையினர் அவரை சுற்றி வளைத்துத் தாக்கியுள்ளனர். முதலில் நடந்த ஏவுகணை தாக்குதலுக்குப் பிறகு அந்த கட்டிடத்தின் உள்ளே டிரோன் அனுப்பிக் கண்காணித்துள்ளனர். அதில் ஒருவர் காயங்களுடன் இருப்பது தெரிய வந்தது. அப்போதும் கூட அது சின்வார் என்பது தெரியவில்லை.
சாதாரண ஹமாஸ் வீரர் என்று நினைத்தே இஸ்ரேல் வீரர்கள் அடுத்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் அவர் கொல்லப்பட்டார். அருகே சென்று பார்த்த போது தான் அது சின்வார் போல இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து இஸ்ரேல் நடத்திய டிஎன்ஏ சோதனையிலேயே அவர் சின்வார் என்பது உறுதியானது. அதைத் தொடர்ந்தே சின்வார் கொலை குறித்து இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதற்கிடையே சின்வார் பிரேதப் பரிசோதனை குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் சின்வார் துப்பாக்கி சுட்டினாலே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது உயிரிழப்பதற்கு முன் அவரது முன்கை உடைக்கப்பட்டு, கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சின்வாரின் தலையில் குண்டு பாய்ந்து உயிரிழந்த நிலையில், அதற்கு முன்பு அவரது உடலில் பல இடங்களில் படுகாயம் ஏற்பட்டுள்ளதாகப் பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர் கூறினார்.
61 வயதான ஹமாஸ் தலைவர் சின்வாரின் ஆள்காட்டி விரல் வெட்டி எடுக்கப்பட்டு டிஎன்ஏ சோதனைக்கு அனுப்பப்பட்டு இருந்தது. அதுவும் பிரேச பரிசோதனை முடிவுகளில் உறுதியாகியுள்ளது.இந்த பிரேதப் பரிசோதனையை மேற்பார்வையிட்ட இஸ்ரேல் தேசிய தடயவியல் நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் சென் குகேலின் கூறுகையில், “சின்வார் தலையில் பாய்ந்த துப்பாக்கிக் குண்டு காரணமாகவே உயிரிழந்தார். அதற்கு முன்பு சிறிய ஏவுகணை தாக்கியதில் அவரது முன்கை உடைந்து கடுமையான ரத்த போக்கு ஏற்பட்டது. அதை நிறுத்த கடைசி நொடிகளில் அங்கிருந்த மின்சாரக் கம்பியைத் கையில் சுற்றி ரத்தப் போக்கை நிறுத்த முயன்று இருக்கிறார். இருப்பினும், வலுவாகக் கட்ட முடியாததால் அவரால் ரத்தப் போக்கை நிறுத்த முடியவில்லை.
கொஞ்சம் இதையும் படிங்க : http://thenewscollect.com/if-you-invest-rs-57000-you-will-get-rs-4000-daily-money-from-fraud-company-tamannaahs-problem/
அவர் இஸ்ரேலில் கைதியாக இருந்த போது எடுக்கப்பட்ட டிஎன்ஏ மாதிரிகள் இருந்தது. அதை வைத்தே உயிரிழந்தது சின்வார் தான் என்பதை உறுதி செய்தோம் சின்வார் உயிரிழந்து 36 மணி நேரத்திற்குள் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அவரது உடல் இஸ்ரேல் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் சின்வார் உடலை ரகசிய இடத்திற்கு எடுத்துச் சென்றனர்” என்றார்.
Leave a Reply
You must be logged in to post a comment.