தீபாவளி இறைச்சிக்காக மானைச் சுட்ட போது தோட்டா நண்பர் மீது பாய்ந்து பலி – மூன்று பேர் கைது..!

2 Min Read

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியிலும் கங்கைகொண்டான் மான் பூங்கா பகுதியிலும் மான்கள் துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடப்படுகின்றன. இது போன்று வன விலங்குகளை வேட்டையாடுவது தொடர் கதையாகி வருகிறது. சில சமூக விரோதிகள் இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இது போன்று வன விலங்குகளை வேட்டையாடுவதால் வன விலங்குகளின் எண்ணிக்கை குறைந்து விடும். தமிழக வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து மான் வேட்டையை கட்டுப்படுத்த வேண்டும் வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

- Advertisement -
Ad imageAd image

திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூர் தாலுகா தென்மலை அத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல், பிரகாஷ், சக்திவாசன் மேலும் உள்ளிட்ட நான்கு பேர் ஜவ்வாது மலைப்பகுதியில் அடிக்கடி மான் வேட்டையாடுவது வழக்கம் போல், மான் வேட்டைக்காக சென்ற போது வனப்பகுதியில் மானை குறி வைத்து துப்பாக்கியால் சுட்டபோது குண்டு குறி தவறி, உடன் வேட்டைக்குச் சென்ற சக்திவேல் என்ற இளைஞர் மீது துப்பாக்கி குண்டு பட்டு சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்துள்ளார். மேலும் பிரகாஷ் என்ற இளைஞர் முகத்தில் காயத்துடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வனப்பகுதி

இச்சம்பவம் குறித்து வனத்துறையினயிடமும், காவல்துறையிடமோ தகவல் அளிக்காமல் உறவினர்கள் உடலை அடக்கம் செய்ய முயன்ற போது புதுப்பாளையம் மற்றும் ஜமுனாமரத்தூர் போலீசார் உயிரிழந்த சக்திவேலின் உடலை அவர்களிடம் இருந்து மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வனத்துறை மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தீபாவளி இறைச்சிக்காக மானை வேட்டையாட சென்ற நபர் போலிசார் விசாராணை

மான் வேட்டைக்கு சென்ற போது எதிர்பாராத விதமாக துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் உடன் சென்ற இரண்டு நபர்களை விசாரணைக்காக செங்கம் போலீசார் அழைத்து வந்துள்ளனர். மேலும் தலைமறைவாகி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரகாஷை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இது போன்ற சம்பங்களில் இவர்கள் மட்டும் தான் ஈடுபட்டார்களா இல்லை, வேறு யாராவது ஈடுபட்டு வருகின்றனரா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். வன விலங்குகளை வேட்டையாடுவது சட்டப்படி குற்றம்.

செங்கம் காவல் நிலையம்

இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். களக்காடு முண்டந்துறை மான் பூங்காவிற்க்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் சட்ட விரோதமாக இவர்களுக்கு துப்பாக்கி கிடைத்ததா அல்லது அனுமதி பெற்று துப்பாக்கி வைத்திருந்தனரா என்பது விசாரணையில் தெரியவரும்.

Share This Article

Leave a Reply