திருப்புத்தூரில் அக்காவை கத்தியால் குத்தியை தம்பி..!

2 Min Read

திருப்பத்தூர் அருகே வீடு புகுந்து கல்லூரிக்கு சென்று வீடு திரும்பிய அக்காவை சரமாரியாக கத்தியால் தாக்கிய ஒன்பதாம் வகுப்பு பயிலும் தம்பி. கூச்சலிட்ட பாட்டியையும் விட்டு வைக்காமல் காதை அறுத்து தப்பி ஓடிய மாணவனை கைது செய்து கந்திலி போலீசார் விசாரணை.

- Advertisement -
Ad imageAd image
மோனிஷா

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பரதேசிப்பட்டி பகுதியைச் சேர்ந்த மனோகரன் மற்றும் கோகிலா இவருடைய மகள் மோனிஷா இவர் ஊத்தங்கரை பகுதியில் உள்ள அதியமான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். மேலும் மனோகரன் மற்றும் கோகிலா ஆகிய இருவரும் பரதேசிபட்டியில் வீட்டிலிருந்து சிறிது தூரம் தொலைவில் மளிகை கடை மற்றும் டீக்கடை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்த மோனிஷா வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்த போது மோனிஷாவின் சித்தப்பா மகன் இன்பரசு திடீரென வீட்டிற்குள் புகுந்து மோனிஷாவை கத்தியால் சரமாரியாக தாக்கி தப்பி சென்றுள்ளார்.

மோனிஷா

இதனால் மோனிஷா கத்தி கூச்சலிட்டு உள்ளார். அப்போது வீட்டின் அருகே உள்ள அவருடைய பாட்டி பாப்பாத்தி அம்மாள் யாரோ வீட்டிற்குள் புகுந்து உள்ளதாக கத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இன்பரசு பாப்பத்தியம்மாவின் காதிலும் வெட்டியுள்ளார். இதன் காரணமாக இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.
இதனைத் தொடர்ந்து இருவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் மோனிஷாவிற்கு தலை, கை, மற்றும் வயிற்றுப் பகுதியில் சரமாரியாக வெட்டியதன் காரணமாக முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கந்திலி காவல் நிலையம்

மேலும் இந்த சம்பவம் குறித்து கந்திலி போலீசார் இன்பரசுவை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் கிடைத்த முதல் கட்ட தகவலில் ஒரு மாதத்திற்கு முன்பு மோனிஷாவின் சித்தி சத்யாவின் மொபைல் காணாமல் போனதை தொடர்ந்து இன்பரசுவின் மீது சந்தேகம் கொண்டு அதை கொடுத்து விடும்படி மோனிஷா கேட்டதில் வக்கிரம் கொண்டு ஒரு மாதம் கழித்து, தற்பொழுது கத்தியால் குத்திச் சென்றதாக தெரிய வந்துள்ளது. தொடர்ந்து கந்திலி போலீசார் மாறுபட்ட கோணங்களில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவன் இன்பரசுவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Article

Leave a Reply