பல தடைகளை உடைத்து, தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம்..!

2 Min Read

பல தடைகளை உடைத்து, உச்சநீதிமன்ற அனுமதியுடன் இன்று தமிழகத்தில் பல பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.

- Advertisement -
Ad imageAd image

எனவே, ஆர்.எஸ்.எஸ் இயக்கம் உயர் நீதிமன்றத்தை நாடியது. இதையடுத்து, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. தமிழகம் முழுவதும் 55 இடங்களில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். விஜயதசமியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 55 இடங்களில் அணிவகுப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த ஆர்.எஸ்.எஸ் இயக்கம் சார்பில் அனுமதி கோரப்பட்டது. ஆனால், இதற்கு தமிழக காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. எனவே, ஆர்.எஸ்.எஸ் இயக்கம் உச்ச நீதிமன்றத்தை நாடியது. இதையடுத்து, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம்

கோவை மாவடத்தில் இன்று நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம் துடியலூர் பேருந்து நிலையத்தில் தொடங்கி, சேரன் காலனி விஸ்வநாதபுரம் வழியாக துடியலூர் பொருட்காட்சி மைதானத்தை அடைந்து அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஆண்டுதோறும் விஜயதசமி விழாவை முன்னிட்டு, நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடைபெறும். தமிழக அரசு தொடர்ந்து இந்த ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு முட்டு கட்டை போட்டு வந்த நிலையில் ,உச்ச நீதிமன்ற ஆதரவை தொடர்ந்து இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. கோவையில் இன்று நடைபெற்ற ஊர்வலத்தில் காக்கி நிற கால் சட்டையும் வெள்ளி நிற மேல்சட்டையும் முழு சீருடையுடன் சுமார் 700 ஸ்வயம் சேவகர்கள், ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

இந்த வழக்கில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு தமிழக அரசு விதித்த தடையை ரத்து செய்த, உச்ச நீதிமன்றம் ஊர்வலத்தை நடத்துவதற்கும் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இந்த உத்தரவைத் தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு நடந்தி, காக்கி நிற கால் சட்டையும் வெள்ளி நிற மேல்சட்டையும் முழு சீருடையுடன் சுமார் 700 ஸ்வயம் சேவகர்கள், ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். கோவையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தில் காக்கி நிற கால் சட்டையும் வெள்ளி நிற மேல்சட்டையும் சீருடையாக அணிந்து சுமார் 700 ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம் சேவகர்கள் கலந்து கொண்டனர். தமிழக காவல்துறை பாதுகாப்புடன் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தில் பெண்கள், பள்ளி மாணவ மாணவிகள், முதியவர்கள் என அனைத்து வயதினரும் பங்கேற்றனர்.

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம்

தமிழகம் முழுவதும் 55 இடங்களில் நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இந்த பேரணியில் அந்தந்த பகுதியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் தலைமை தாங்கினர். அதேபோல், குழந்தைகள் பலரும் முழுசீருடை அணிந்து பேரணியில் கலந்து கொண்டனர். திருச்சியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் பேரணியில் பங்கேற்க வந்த பாஜக தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராகிமை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் கைது செய்தனர். ஆர்.எஸ்.எஸ் பேரணி நடைபெற்ற இடங்களில் நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Share This Article

Leave a Reply