தமிழகத்தில் காலை உணவு திட்டம் வரவேற்கத்தக்கது. அதில் யாரும் அரசியல் செய்யக்கூடாது. இந்த திட்டத்திற்கு ஒன்றிய அரசு நிதி வழங்க தயாராக உள்ளது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
சேலம் மாவட்டம், அடுத்த கொண்டலாம்பட்டி ரவுண்டானா பகுதியில், பாஜக சார்பில் நடந்த காமராஜர் பிறந்த நாள் விழாவில், தமிழக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த 2020 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்வி கொள்கை திட்டத்தில், காலை உணவு திட்டம் இடம் பெற்றுள்ளது. தமிழகத்தில் ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு, காலை உணவுத் திட்டம் வழங்குவது வரவேற்கத்தக்கது.
அதில் யாரும் அரசியல் செய்யக்கூடாது. இந்த திட்டத்திற்கு தேவையான நிதியை வழங்க ஒன்றிய அரசு தயாராக உள்ளது. அரசு இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நீட் தேர்வு மிகவும் அவசியமான ஒன்று.

நீட் தேர்வில் ஒரு சில இடங்களில் தவறு நடந்துள்ளது. தேர்வில் தவறு செய்தவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டால், புதிய சட்டத்தின்படி 10 ஆண்டு தண்டனை கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.