நடிகர் சரத்பாபு உடல் தகனம்… ரஜினி முதல் சூர்யா வரை நேரில் அஞ்சலி

2 Min Read
நடிகர் சரத்பாபு உடல் தகனம்... ரஜினி முதல் சூர்யா வரை நேரில் அஞ்சலி

தென்னிந்திய மூத்த திரைப்பட நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவால் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் உயிரிழிந்தார்.

- Advertisement -
Ad imageAd image

பிரபல நடிகர் சரத்பாபு ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாகுளம் ஆமுதாலவலசா எனும் ஊரில் கடந்த 1951-ம் ஆண்டு, ஜூலை 31-ம் தேதி பிறந்தார். இவரது இயற்பெயர் சத்யம்பாபு தீக் ஷித். இவருக்கு கடந்த ஆண்டு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. செப்ஸிஸ் எனும் நோயால் சரத்பாபு பாதிக்கப்பட்டார்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் நடிகர் சரத்பாபு.

உடல்நலம் பாதிக்கப்பட்ட நடிகர் சரத் பாபு சென்னையில் சிகிச்சை பெற்ற இவர், பிறகு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறத் தொடங்கினார். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்பட்டன.  கடந்த சில வாரங்களாக அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்து வந்தது. இந்த நிலையில் திடீரென  சிகிச்சை பலனின்றி சரத்பாபு நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

நடிகர் சரத்பாபு கிட்டத்தட்ட 50 வருடங்களாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் முள்ளும் மலரும், உதிரிபூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, நெற்றிக்கண், வேலைக்காரன், அண்ணாமலை போன்ற பல படங்களில் நடித்தவர் சரத்பாபு. ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடம் என தனக்கு கிடைக்கும் கதாப்பாத்திரங்கள் அனைத்திலும் சிறந்த முத்திரை பதித்துள்ளார்.

குறிப்பாக ரஜினிகாந்த்துடன் இவர் நடித்த முள்ளும் மலரும், வேலைக்காரன், அண்ணாமலை, முத்து படங்களின் மூலம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தார்.ரஜினிக்கு மிகவும் நெருக்கமானவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார்.தமிழ் திரைப்படத்தில் மிக சிறந்த பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்தவர் சரத்பாபு.

இன் நிலையில் நடிகர் சரத்பாபுவின் உடல் நேற்று முன் தினம்  இரவு 8 சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. சென்னையில் உள்ள தி. நகர் இல்லத்தில் தமிழ் திரையுலக பிரபலங்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது. இந்நிலையில் நடிகர்கள் ரஜினிகாந்த், சூர்யா, சுஹாசினி மணிரத்னம், சரத் குமார், ராதிகா சரத்குமார், ஒய்.ஜி.மகேந்திரன், பாக்யராஜ், பூர்ணிமா பாக்கியராஜ் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்ற நிலையில்  கிண்டியில் உள்ள மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

Share This Article

Leave a Reply