தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூபாய் 20 லட்சம் மதிப்பில் இரத்த சுத்திகரிப்பு வசதி தொடக்கம்

1 Min Read
சுத்திகரிப்பு இயந்திரம்

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை , உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகள் ஏராளமானோர் சிகிச்சை பெற வருகின்றனர், இதனையடுத்து தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தீவிர மருத்துவ சிகிச்சை பிரிவில் ரூபாய் 20 லட்சம் மதிப்பில் இரண்டு நவீன இரத்த சுத்திகரிப்பு வசதி தொடங்கப்பட்டுள்ளது,

- Advertisement -
Ad imageAd image
மருத்துவமனை

இக்கருவியினை மருத்துவக் கல்லூரி கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜிநாதன் தொடங்கி வைத்தார், இதுகுறித்து அவர் கூறும்போது, தீவிர மருத்துவ சிகிச்சை பிரிவில் தொடங்கப்பட்டுள்ள இரண்டு இரத்த சுத்திகரிப்பு கருவியின் மூலம் நான்கு நபர்கள் பயன்பெற முடியும்,

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்கனவே 32 இரத்த சுத்திகரிப்பு கருவிகள் செயல்பட்டு வருகின்றன, இந்த வசதியின் மூலம் விஷ முறிவு, பாம்பு கடி முதலிய நோயாளிகளுக்கு இரத்த சுத்திகரிப்பு செய்து உயிரைக் காக்க முடியும் என்று தெரிவித்தார், இந்நிகழ்ச்சியில் நிலைய மருத்துவர் டாக்டர் செல்வம் உள்ளிட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர்

Share This Article

Leave a Reply