காஞ்சிபுரம் மாவட்ட பாஜக துணைத் தலைவராக செயல்பட்டு வருபவர் செந்தில்குமார். பிரதான தொழிலாக விவசாயம் மேற்கொண்டு வந்த நிலையில் காலமாற்றம் காரணமாக அரசியலில் இடம்பெற்று தற்போது பாஜகவில் தனக்கென ஒரு இடத்தில் அனைவராலும் அறியப் படும் நபராக,ஓர் அரசியல் பிரமுகராக உள்ளார். விவசாயி என்பதால் விவசாயிகளின் உண்னதத்தை போற்றும் வகையில் ஆண்டுதோறும் பொங்கல் திருநாளன்று விவசாயிகள் உற்பத்தி பொருளாக விளங்கும் செங்கரும்பின் மூலம் பல்வேறு வகையில் விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படுத்துவார்.

தற்போது அரசியல் பிரமுகராக தான் அறியப்பட்டாலும் கூட அவர் தான் எப்போதும் ஓர் விவசாயி என்பதால் விவசாயம் மற்றும் விவசாயிகளின் உண்னதத்தை போற்றும் வகையில் ஆண்டுதோறும் பொங்கல் திருநாளன்று விவசாயிகள் உற்பத்தி பொருளாக விளங்கும் செங்கரும்பின் மூலம் பல்வேறு வகையில் விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அவ்வகையில் செங்கரும்பில் ஆன பொங்கல் பானை,ஜல்லிக்கட்டு காளைகள்,பாரதப் பிரதமர் மோடி உருவம் என பலவகையில் ஆண்டுதோறும் அதனை செயல்படுத்தி வருகிறார்.

பாரம்பரிய பொருள்களை அனைவரும் அறிந்து கொள்ளவும்,பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் விழிப்புணர்வுக்காக, சுமார் 3டன் செங்கரும்பினால் ஆன பாரம்பரிய குடிசை வீடு அமைத்து அதில் பழங்கால பாரம்பரிய பொருட்களான சமையல் உபகரணங்கள், அளவைகள் உள்ளிட்டவைகளை காட்சிப்படுத்த திட்டமிட்ட அவர் கடந்த ஒரு வார காலமாகவே அதற்கான முயற்சியில் ஈடுபட்டு தற்போது அதனை நிறைவு செய்துள்ளார்.மேலும் பொங்கல் திருநாளில் தனது குடும்பத்துடன் அவர் ஏற்படுத்திய இந்த “செங்கரும்பு குடில்” முன்பு கிராமிய முறைப்படி பொங்கல் இட திட்டமிட்டுள்ளார்.

உழவர்களின் உற்பத்தி பொருளை பயன்படுத்துவதன் மூலம் அவர்களுக்கு தேவையான வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமல்லாமல்,பிரதமரின் திட்டங்களில் ஒன்றான அனைவருக்கும் வீடு என்பதை விழிப்புணர்வு ஏற்படுத்தவே இதனை மேற்கொண்டதாக இதுகுறித்து அவர் தெரிவிக்கிறார். இந்த செங்கரும்பினால் ஆன பாரம்பரிய குடிசை வீடு பார்க்க அழகான தோற்றத்திலும்,பார்ப்பவரை ஒரு நிமிடம் மெய் மறக்க செய்யும் வகையில் தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.