பாஜக தொழிற்பிரிவு மாநில துணைத்தலைவர் சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் ஆஜர்..!

2 Min Read
பாஜக தொழிற்பிரிவு மாநில துணைத்தலைவர் சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் ஆஜர்

பாஜகவின் தொழிற்பிரிவு மாநில துணை தலைவராக பி.எஸ்.செல்வகுமார் என்பவர் இருந்து வருகிறார். தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான பி.ஜி.ஆர் ஊழல், டாஸ்மாக் பார் முறைகேடு ஆகியவற்றில் மிக தீவிரமாக பிரச்சாரம் செய்ததாக பாஜக கட்சியினர் கூறுகின்றனர்.

- Advertisement -
Ad imageAd image
பாஜக தொழிற்பிரிவு மாநில துணைத்தலைவர் சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் ஆஜர்

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் திமுக கோப்புகள் வருவதற்கு இரண்டு நாட்கள் முன்பு, அதிகாலை 3 மணிக்கு 10 காவலர்கள் அவரது வீட்டிற்கு சென்று பொய் வழக்கில் கைது செய்தனர். இதனால் ஒரு வாரம் கோவை மத்திய சிறையில் இருந்தார்.

பின்பு ஆவின் பாலில் கொழுப்பு குறைக்கப்பட்டு, அதே விலையில் விற்கபடுவதற்கு எதிராக தீவிரமாக கொழுப்பு திருட்டு என்ற பெயரில் அதிகமாக பிரச்சாரம் செய்தவர் என கூறுப்படுகிறது.

பாஜக தொழிற்பிரிவு மாநில துணைத்தலைவர் சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் ஆஜர்

அதை சென்ற வாரம் கூட இலவச வேட்டி சேலை திட்டத்தில் பருத்திக்கு பதிலாக பாலியெஸ்டர் நூல் பயன்படுத்தியதை மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் மூலம் வெளி கொண்டு வந்ததாக சொல்லப்படுகிறது.

அப்போது கடந்த 2022 ஆம் ஆண்டு திமுக அரசால் உயர்த்தபட்ட மின் கட்டணத்தால் ஏற்படும் பாதிப்புகளை தொடர்ச்சியாக பல்வேறு ஊடகங்களில் பேசி வந்தவர். கடந்த சில வாரங்களாக பல்வேறு தொழில் அமைப்புக்கள், சமூக அமைப்புக்கள், சமூக ஆர்வலர்களை சந்தித்து அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து வருவதாக தகவல்.

பாஜக தொழிற்பிரிவு மாநில துணைத்தலைவர் சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் ஆஜர்

அவற்றை தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் கோவை குண்டுவெடிப்பு தினமான பிப்ரவரி 14 அன்று #கோவை_மன்னிக்காது என்ற ஹேஷ்டேக் என்பதை எக்ஸ் வலைதளத்தில் ட்ரெண்ட் செய்ய காரணமாக இருந்ததாக கூறுப்படுகிறது.

பாஜக தொழிற்பிரிவு மாநில துணைத்தலைவர் சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் ஆஜர்

மேலும் கோவை குண்டுவெடிப்பு தீவிரவாதிகளை விடுதலை செய்ய திமுக, அதிமுக, நாம் தமிழர், விசிக , கம்யூனிஸ்ட் கட்சிகள் வாக்குறுதி கொடுத்திருப்பதாக அவருடைய சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

அதனால் பிப்ரவரி 14-ல் அவர் பதிவிட்ட சமூகவலைதள பதிவுகள் மதபிரச்சனையை தூண்டுவதாக கூறி கோவை மாநகர இணைய வழி குற்றப்பிரிவு போலீசார் செல்வகுமாருக்கு சம்மன் அனுப்பி உள்ளனர்.

பாஜக தொழிற்பிரிவு மாநில துணைத்தலைவர் சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் ஆஜர்

அதன் அடிப்படையில் இன்று பிப்ரவரி 21 அன்று கோவையில் உள்ள இணைய வழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராகி உள்ளார். அப்போது விசாரணையின் முடிவில் செல்வகுமார் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முன்பு பாஜக மற்றும் இந்து முன்னணியினர் கூடியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share This Article

Leave a Reply