மணிப்பூரில் நடந்த சம்பவங்களுக்கு பாஜக பொறுப்பேற்க வேண்டும் காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,”மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, எந்த மசோதாவோ, பிற அலுவல்களோ அவைக்கு கொண்டு வருவது முற்றிலும் நாடாளுமன்ற மரபு, உரிமை மற்றும் தார்மீகங்களை மீறுவது ஆகும்.
நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு நடந்துள்ள அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் அரசியலமைப்பு ரீதியாக சந்தேகத்திற்குரியவை.

எனவே நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு மக்களவை அல்லது மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட அனைத்து மசோதாக்களின் சட்டப்பூர்வ தன்மையும், அவை சட்டப்பூர்வமாக நிறைவேற்றப்பட்டதா? இல்லையா? என்பதையும் நீதிமன்றத்தால் ஆய்வு செய்ய வேண்டும்.
மணிப்பூரில் நடந்ததும், அங்கு தொடர்ந்து நடப்பதும் முற்றிலும் கண்டிக்கத்தக்கது.
மாநிலத்தில் பா.ஜனதா அரசு உள்ளது, மத்தியில் பா.ஜனதா அரசு உள்ளது. எனவே, யாராவது இதற்கு பொறுப்பேற்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.