தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பான விவாதம் குறித்து தமிழ் நடிகரும், அரசியல் தலைவருமான விஜய் முதல் முறையாக பேசியுள்ளார். “விதிவிலக்கு ஒன்றே தீர்வு” என்றார்.திமுக அரசின் நீட் எதிர்ப்பு தீர்மானத்துக்கு நடிகர் விஜய் ஆதரவு அளித்துள்ளார்.நீட் மருத்துவ நுழைவுத் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சில நாள்கள் கழிந்துள்ளது. இந்நிலையில், இத்தீர்மானத்தை நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் வரவேற்றுள்ளார்.

நீட் தேர்வு தமிழகத்தில் பல மாணவர்களை தற்கொலைக்கு தூண்டியது எல்லோரும் அறிந்ததே. தற்போது நீட் தேர்வில் பல்வேறு குழப்பங்கள் தொடர்ந்து நீடித்து வருகின்றன. வட மாநிலங்களில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பஞ்சமே இல்லை. இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் நீட் தேர்வு வேண்டாம் என்கிற மனநிலைக்கு ஒட்டுமொத்த அரசியல் கட்சியினரும் முடிவெடுத்த நிலையில் பாஜக மட்டும் அதை ஆதரித்து வருகிறது. இந்த வகையில் தற்போது புதிதாக தமிழக வெற்றிக் கழகம் துவங்கியுள்ள நடிகர் விஜய் திமுக அரசு நீட் தேர்வு தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள முடிவிற்கு வரவேற்பு கொடுத்துள்ளார். நீட் தேர்வுக்கு எதிராக புதிய கட்சி தொடங்கிய விஜய் வரவேற்பு கொடுத்துள்ள நிலையில் திமுக அரசுக்கு நீட் தேர்வை எதிர்ப்பதில் கூடுதல் பலம் கிடைத்திருக்கிறது எனலாம். பெற்றோர்களும் மாணவர்களும் விஜயின் இந்த முடிவை முழுதாக வரவேற்கின்றனர்.
“கல்வி மற்றும் சுகாதாரத் துறைகள் மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும்” என வலியுறுத்தினார். சமீபத்தில் நடைபெற்ற 10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களை கவுரவிக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் புதன்கிழமை (ஜூலை 3 2024) சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண் விஜய், “நீட் தேர்வில் மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். நாட்டிற்கு நீட் தேவையில்லை. நீட் தேர்வில் இருந்து விலக்கு மட்டுமே ஒரே தீர்வு. மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை நான் முழுமனதுடன் வரவேற்கிறேன். தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். கல்வியை கன்கரண்ட் லிஸ்டில் இருந்து மாநிலப் பட்டியலின் கீழ் கொண்டு வர வேண்டும்” என்றார்.
மேலும், “இடைக்காலத் தீர்வாக, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தியமைத்து ‘சிறப்பு கூட்டுப் பட்டியல்’ உருவாக்கி, அதன் கீழ் கல்வி மற்றும் சுகாதாரம் சேர்க்கப்பட வேண்டும்” என்றார்.மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (நீட்) நடத்துவதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் நடிகர் விஜய்யிடம் இருந்து இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன.தொடர்ந்து திமுக அரசு நீட் தேர்விற்கு எதிராக நடத்தப்படும் அனைத்து செயல்பாடுகளிலும் இனி விஜய் ரசிகர் மன்றம் இருக்கும் எனலாம். அது மட்டும் அல்லாமல் அவரின் தமிழக வெற்றிக்கழகமும் உறுதுணையாக இருக்கும் என்று அரசியல் ஆர்வலர்கள் கருதுகிறார்கள். விஜயின் இந்த ஆரோக்கியமான அரசியல் வரவேற்க தகுந்ததாகவே இருப்பதாகவே அரசியல் தெரிவிக்கின்றனர்
Leave a Reply
You must be logged in to post a comment.