திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள இருவேல்பட்டு கிராமத்தில் மலட்டாறு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட இடத்தையும் மக்களையும் பார்க்கச் சென்ற வனத்துறை அமைச்சர் பொன்முடி மீது சேற்றை அள்ளி வீசிய பாஜக நிர்வாகி 3 மாதத்திற்கு பின் விஜயராணியை போலீசார் கைது செய்தனர்.
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள இருவேல்பட்டு கிராமத்தில் மலட்டாறு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட இடத்தையும் மக்களை பார்க்கச் சென்ற வனத்துறை அமைச்சர் பொன்முடி மீது சேற்றை அள்ளி வீசிய 2பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்த நிலையில் ராமர் என்கிற ராமகிருஷ்ணன் என்ற ஒருவரை ஏற்கனவே போலீசார் கைது செய்தனர். பின் தற்போது 3மாதங்களுக்கு பிறகு விஜயராணியை கைது செய்தனர்.

திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் பெஞ்சல் புயல் மழை மலட்டாறு வெள்ளப்பெருக்கு காரணமாக மலட்டாறு கரையோரமாக உள்ள திருவெண்ணெய்நல்லூர் அரசூர் இருவேல்பட்டு உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிப்புக்கு உள்ளானது. கடந்த டிசம்பர் 3 ந்தேதி பாதிக்கப்பட்ட இடத்தையும் மக்களையும் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண உதவிகள் வழங்க இருவேல்பட்டு கிராமத்திற்கு வருகை தந்த வனத்துறை அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி, முன்னாள் எம்.பி பொன் கௌதமசிகாமணி,மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட உடன் வந்தவர்கள் மீது சேற்றை அள்ளி வீசி விட்டனர்.
அப்போது அவருடன் வந்த தனி பாதுகாப்பு பிரிவு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் அருள்தாஸ் என்பவர்
இருவேல்பட்டு கிராமத்தை அமைச்சர் பொன்முடி பார்வையிட்டு நிவாரண உதவிகள் செய்ய சென்றபோது அமைச்சர் மற்றும் அதிகாரிகளை அசிங்கமாக திட்டி சேரை வாரி கையால் வீசி மிரட்டல் விடுத்ததாகவும் பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் திருவெண்ணெய்நல்லூர் போலீசில் செய்தார். புகாரின் பேரில்
சேற்றை அள்ளி வீசிய இருவேல்பட்டு கிராமத்தை ராமச்சந்திரன் மகன் ராமர் என்கிற ராமகிருஷ்ணன், விஜயராணி ஆகிய இருவர் மீதும் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தேடிவந்த நிலையில் கடந்த 21ந்தேதி ராமர் என்கிற ராமகிருஷ்ணனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

3 மாதமாக வெளியில் தலைமறைவாக இருந்தார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்தவரை விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் சிறப்பு படையினர் விஜயராணியை கைது செய்து திருவெண்ணெய்நல்லூர் போலீசில் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.