தமிழகத்தில் பாஜகவும், நடிகர் விஜயும் 2026 தேர்தலில் குறியாக இருப்பது குறித்த கேள்விக்கு 2024ம் தேர்தல் தான் முதலில் முக்கியம் மீண்டும் பிரதமர் மோடியாக அமர வைக்க வேண்டும். நடிகர் கமல்ஹாசன் தேர்தலின் போது டார்ச் லைட்டை வைத்து என்ன சொல்லி டிவியை உடைத்தார் என்பது அனைவருக்கும் நினைவிருக்கும் எனவும், தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருப்பதாக வானதி சீனிவாசன் பேட்டி.
கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகத்தில் கோவை மக்கள் சேவை மையம் சார்பில் இதம் திட்டம் எனும் இளம் பெண்களுக்கான இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் தானியங்கி இயந்திரம் துவக்க விழா பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தலைமையில் நடைப்பெற்றது. பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்
இன்று ஐந்து இயந்திரங்கள் ஒப்படைத்துள்ளோம்.

எந்தெந்த பகுதிகளில் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள பெண்கள் உள்ளனரோ அங்கு கொடுந்துள்ளோம். மேலும் 150 பெண்களுக்கு கொடுத்துள்ளோம் என்றனர். மாதத்திற்கு 8 நாப்கின்களை எடுத்து கொள்ளலாம். இதற்கு முன் மாதம் மாதம் நான்காயிரம் பெண்களுக்கு நாப்கின் கொடுத்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக இன்று தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இந்த இயந்திரத்தை கொடுத்துள்ளோம் என்றார். மாதவிடாய் காலத்தில் அவர்கள் சுகாதாரமாக இருக்க, பெண் எம்.எல்.ஏ என்ற முறையில் கொடுத்துள்ளோம்.
இன்னும் ஆறு மாத காலத்தில் வார்டுக்கு மூன்று இயந்திரம் அமைக்க உள்ளோம். தனது தொகுதியிலுள்ள இளம் பெண்களுக்கு தீபாவளி பரிசாக இதனை கொடுத்துள்ளோம் என்றார். மழை பெய்தால் தண்ணீர் தேங்காதவாறு இருக்க தான் எம்.எல்.ஏ ஆனது முதல் வலியுறுத்தி வருகிறேன். அப்போதைய அமைச்சர் இன்று சிறையில் இருக்கிறார். லங்கா கார்னர் பகுதியில் தண்ணீர் தேங்கிய இடத்தில் விரைவாக பணி முடிக்க வலியுறுத்தினேன்.
தாமதமாக பணி செய்வதால் இப்பிரச்சிணை தொடர்கிறது. ஆணையரை மாற்றி கொண்டிருப்பதால் எந்த பணியும் கோவையில் சீராக நடைபெறுவதில்லை எனவும், தனியார் மருத்துவமனையில் இடமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு தமிழகத்தில் காய்ச்சல் அதிகரித்துள்ளது. சிறப்பு முகாம் அமைத்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்து மதம் தவிர்த்து மற்ற மதங்களை பற்றி பேசினால் இந்து தர்ம சனாதனத்தில் மட்டுமே கடவுளே இல்லை என்பவர்களை கூட அரவணைக்கும் தன்மை உண்டு.

மதங்கள் தாண்டி மனிதர்களை அரவணைக்கும் பக்குவம் இந்து மதத்தில் மட்டுமே உள்ளது. திமுக சமூக நீதி ஆட்சி செய்து கொண்டிருக்கிறேன் என்று சொல்லி கொண்டிருப்பதாக சொல்லி கொண்டிருக்கிறார்களே தவிர அமைச்சர்கள் பட்டியல் இனத்தவர்களை எப்படி நடத்துகிறார்கள் என்பது தெரியும் என்றார். முழுக்க முழுக்க பட்டியலினத்தவர்களும்கு எதிராக செயல்பட்டு கொண்டிருக்கிறது.
மேலும் நடிகர் கமல்ஹாசன் தேர்தலின் போது டார்ச் லைட்டை வைத்து என்ன சொல்லி டிவியை உடைத்தார் என்பது அனைவருக்கும் நினைவிருக்கும் என்றார். கோவைக்கு முதலில் போட்டியிடட்டும் , அவருக்கு எதிரான வேட்பாளரை கட்சி தலைமை அறிவிக்கும் என்றார். மேலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவிக்கும் கருத்துகள் அனைத்துமே கட்சியின் கொள்கை தான் என்றார்.
Leave a Reply
You must be logged in to post a comment.