அப்போது திடீரென மரத்தின் மீது பைக் மோதியதில் பள்ளி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒரு மாணவர் படுகாயம் அடைந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், அடுத்த அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் நெடுஞ்செழியன். இவரது மகன் சக்திவேல் வயது (16). பின்பு உலகம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் வசந்தகுமார் வயது (17). இவர்கள் இருவரும் சேத்துப்பட்டு அரசு மேல்நிலை பள்ளியில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படித்து வந்தனர்.

இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு வசந்தகுமாரின் மாமாவுக்கு சொந்தமான பைக்கை வாங்கி கொண்டு விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா அவலூர்பேட்டை எய்யில் கிராமத்தில் நடைபெறும் உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது வசந்தகுமார் பைக்கை ஓட்டி வந்தார்.

பின்னர் இவர்களுடன் சக மாணவர் 12 ஆம் வகுப்பு படிக்கும் சஞ்சீவிராயன்பேட்டையை சேர்ந்த முருகன். இவரது மகன் ஐயப்பன் வயது (17) என்பவரும் உடன் சென்றார்.
அப்போது பைக் சென்று கொண்டிருந்த போது எய்யில் கூட்ரோடு அருகே இரவு 11 மணி அளவில் வந்த போது, எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த பைக், அருகில் இருந்த மரத்தின் மீது மோதியது.

இதனால் மரத்தில் மோதிய பைக் நொறுங்கியது. இதில் பலத்த காயமடைந்த வசந்தகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை அடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து உயிருக்கு போராடிய சக்திவேலை மீட்டு, அருகில் உள்ள சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். பின்னர் ஐயப்பன் பலத்த காயங்களுடன் சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அப்போது விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து அவலூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமண விழாவுக்கு ஒரே பைக்கில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் மாணவர்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.