குடியரசுத் துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர், புதுதில்லியில் இன்று பேராசிரியர் ராமன் மிட்டல் மற்றும் டாக்டர் சீமா சிங் ஆகியோர் எழுதிய “சட்டம் மற்றும் ஆன்மீகம்: பிணைப்பை மீண்டும் உருவாக்குதல்” என்ற நூலை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், சட்டத்தின் ஆட்சியை கடைப்பிடிப்பது ஜனநாயகத்தின் மிக முக்கியமானது என்றார். சட்டத்தின் முன் சமத்துவம் இல்லையென்றால் ஜனநாயகத்திற்கு எந்த அர்த்தமும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த சில ஆண்டுகளில் இநத விஷயத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தற்போது ஒவ்வொருவரும் சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்களாக உள்ளனர் என்று அவர் கூறினார். “ஒரு சமூகத்தில், சட்டத்திலிருந்து ஒருவர் தப்பிவிட்டால், முழு சமூகமும் பாதிக்கப்படுகிறது,” என்று அவர் குறிப்பிட்டார்..
பாரதம் “உலகின் ஆன்மீக மையம்” என்று கூறிய அவர், 5000 ஆண்டு நாகரிகத்தைக் கொண்ட பாரதம், காலத்தால் அழியாத வேதங்கள், தத்துவ நூல்கள் மற்றும் கலாச்சார நடைமுறைகளைக் கொண்டுள்ளது என்று கூறினார். ‘தர்மம்’ மற்றும் ‘ஆன்மீகம்’ தொடர்பான செய்தியை உலகிற்கு தொடர்ந்து இந்தியா பரப்பி வருகிறது என்றும் குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.