ஆயுர்வேத மசாஜ் சென்டரில் அழகிகள்.. அதிர்ச்சியூட்டும் சம்பவம்

3 Min Read

கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனியில் ஆயுர்வேத மசாஜ் சென்டருக்குள் நுழைந்து சோதனை நடத்திய போலீசார், அங்கு விபச்சாரம் நடத்திய 7 அழகிகள் உள்பட 8 பேரை அதிரடியாக கைது செய்தனர். வாட்ஸ்-அப் மூலம் வாடிக்கையாளர்களை அழைத்து விபச்சாரம் செய்தை போலீசார் கண்டுபிடித்தார்கள்.

- Advertisement -
Ad imageAd image

மசாஜ் சென்டர் என்ற பெயரில் தமிழகத்தில் சத்தமில்லாமல் விபச்சாரம் நடந்து வருகிறது. இவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் அடிக்கடி சோதனை செய்வார்கள். அதேபோல் ரகசிய தகவல்கள் அடிப்படையிலும் போலீசார் திடீரென ஆய்வு செய்வார்கள். அப்படி ஆய்வு செய்யும் போது, விபச்சாரம் நடப்பது உறுதியானால், அங்கிருக்கும் அழகிகள் காப்பகங்களில் ஒப்படைக்கப்படுவார்கள்.

விபச்சார புரோக்கர்கள் மற்றும் விபச்சாரம் நடத்தும் ஸ்பா உரிமையாளர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள். அடிக்கடி விபச்சார வழக்கில் கோவை பகுதியில் கைது செய்யப்படும் சம்பவங்கள் நடக்கின்றன. அந்த வகையில் கோவை சாய்பாபா காலனியில் புதிதாக 8 பேர் கைதாகி உள்ளனர்.

கோவை இடையர்பாளையம் சிவாஜி காலனி பகுதியை சேர்ந்த 26 வயதாகும் செல்வம் , மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா கோவில் அருகே உள்ள தனியார் பேக்கரி முன்பு நின்று கொண்டிருந்திருக்கிறார். அங்கு வந்த ஒரு இளைஞர் எதிரே ஆயுர்வேத மசாஜ் சென்டர் இருக்கிறது.
அதில் ஏராளமான அழகிகள் இருக்கிறார்கள். தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப உல்லாசமாக இருக்கலாம் என ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துச் சென்றுள்ளார்கள்,

அங்கே வரிசையாக வந்து நின்ற அழகிகளை பார்த்ததும் செல்வம் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர்,ஏ.டி.எம். மில் இருந்து பணத்தை எடுத்து வருவதாக கூறி அங்கிருந்து தப்பி சென்றார். பின்னர் நடந்த சம்பவங்களை கோவை சாய்பாபாபோலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்த புகாரின் பேரில் ஆயுர்வேத மசாஜ் சென்டருக்கு விரைந்து சென்ற போலீசார் உள்ளே அதிரடியாக நுழைந்தனர். மசாஜ் சென்டரில் சுமார் 7 அழகிகளுடன் மேலாளர் உள்பட 8 நபர்கள் இருந்தார்கள், அவர்களை மடக்கி பிடித்து சோதனை நடத்தினர். சோதனையில் ஆயுர்வேதிக் மசாஜ் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பது உறுதியானது.

போலீசார் நடத்திய விசாரணையில், மசாஜ் சென்டரை நடத்தி வருவது மகேஷ் என்பது தெரியவந்தது. அந்த ஆயுர்வேத மசாஜ் சென்டருக்கு மேலாளராக திருச்சி மாவட்டம் முல்லை வாசல் பகுதியை சேர்ந்த முகிலன் (23) என்பவர் பணியாற்றி வந்திருக்கிறார் .தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, அசாம் போன்ற மாநிலங்களில் இருந்து பெண்களை கோவைக்கு வரவழைத்துள்ளார்கள். அவர்களுக்கு கோவையில் வாடகைக்கு வீடு எடுத்து கொடுத்துள்ளனர். அதன் பின்னர் மசாஜ் சென்டரில் விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது.

செல்போன் மற்றும் வாட்ஸ்-அப் மூலமாக வாடிக்கையாளர்களை மசாஜ் சென்டருக்கு வரவழைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள். அவ்வாறு வாட்ஸ் அப்பில் பார்த்து ஆசையுடன் வருபவர்களுக்கு நுழைவு கட்டணம் என நிர்ணயம் செய்கிறார்கள். பின்னர் உள்ளே சென்றவுடன் விருப்பத்திற்கு ஏற்ப அழகிகள் அவர்களிடம் பணம் வாங்கியதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

ரூ.2,500 முதல் 20 ஆயிரம் வரையில் ஒரு நபருக்கு பணம் பெற்றுள்ளார்கள். இதில் பல ஆண்கள், தாங்கள் கொண்டு செல்லும் எல்லா பணத்தையும் இழந்திருக்கிறார். வெளியில் சொல்ல முடியாமல் இடத்தை மனவேதனையுடன் வெளியேறியதும் தெரிய வந்துள்ளது. இது குறித்து சாய்பாபா காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 அழகிகள் மற்றும் ஒரு ஆண் என 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள மசாஜ் சென்டர் உரிமையாளர் மகேஷை போலீசார் தேடி வருகிறார்கள்.

Share This Article

Leave a Reply