காதலியின் ஆபாச வீடியோவை நண்பருக்கு பகிர்ந்த வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டார். அரியலூர் மாவட்டம், அடுத்த ஜெயங்கொண்டம் அருகே உள்ள வடவீக்கம் கிராமத்தை சேர்ந்த கொளஞ்சி மகன் சிவா (35). தனியார் வங்கி ஊழியர்.
தான் வேலை பார்க்கும் வங்கி மூலம் கிராமம் கிராமமாக சென்று பெண்களுக்கு மைக்ரோ பைனான்ஸ் வழங்கி வந்தார். கடன் தொகையை வசூலிக்க சென்ற போது ஜெயங்கொண்டம் அருகேயுள்ள மருங்காலக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த திருமணமான 39 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் தகாத உறவாக மாறி, அடிக்கடி வெளியூர் சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனால் அந்த பெண்ணை சிவா வழக்கம் போல உல்லாசத்துக்கு அழைத்த போது மறுத்துவிட்டார். ஏற்கனவே அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்த போது சிவா வீடியோ எடுத்து வைத்துள்ளார். அதை காட்டி மிரட்டி அழைத்துள்ளார்.

ஆனாலும் அந்த பெண் வரவில்லை. இதனால் சிவா உல்லாச வீடியோவை தனது நண்பர்களிடம் பகிர்ந்துள்ளார். அதில் அவரது நண்பர்களில் ஒருவர், இந்த வீடியோவை சென்னையில் உள்ள அந்த பெண்ணின் கணவருக்கு அனுப்பி விட்டார்.
இதை பார்த்த அந்த பெண்ணின் கணவர் கடும் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் பெண்ணின் கணவர் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து தனியார் வங்கி ஊழியர் சிவாவை நேற்று கைது செய்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.