திருச்செங்கோட்டில் குழந்தை விற்பனை அரசு மருத்துவமனை மருத்துவர் அனுராதா, புரோக்கர் பெண் லோகாம்பாள் என 2 பேர் கைது. மேலும் பலருக்கு தொடர்பு இருப்பது அம்பலம் அவர்களை பிடிக்க 5 தனிப்படை அமைத்து போலீசார் தேடுதல் வேட்டை
திருச்செங்கோடு வாலரை கேட் பகுதியைச் சேர்ந்தவர்கள் தினேஷ், நாகஜோதி, நூற்பாலை தொழிலாளர்களான இந்த தம்பதிகளுக்கு கடந்த 7 வருடங்களுக்கு முன் திருமணம் ஆகி சிபானி (41/2) லக்சனா(21/2) என்ற 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 7.10.23 அன்று சூரியம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 3வதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.
குழந்தைக்கு சளித் தொந்தரவு இருந்ததால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து அன்று இரவே சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு தாயையும், குழந்தையையம் அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சிகிச்சை முடிந்து கடந்த 12ஆம் தேதி வீட்டிற்கு திரும்பி உள்ளனர். அதே நாள் மாலை அரசு மருத்துவமனையில் இருந்து பேசுவதாக கூறி பேசிய பெண் ஒருவர் குடும்ப கட்டுபாடு அறுவை சிகிச்சை செய்யாதது ஏன் என விசாரித்து விட்டு குழந்தையை பார்க்க மாலை வருவதாக கூறியுள்ளார்.

இது குறித்து தங்களது வீட்டருகே இருந்த நர்சு ஒருவரிடம் கேட்ட போது திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அவ்வாறு பேச மாட்டார்கள் கவனமாக இருங்கள் என எச்சரித்து உள்ளார். போனில்கூறிய படி வராமல் அடுத்த நாளான அன்று வாலரை கேட்பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் தினேசை சந்தித்த அந்தப் பெண் தனது பெயர் லோகாம்பாள் என அறிமுகப்படுத்தி கொண்டு தான் சாணார்பாளையத்தில் வசிப்பதாகவும் 3 பெண் குழந்தைகளை வைத்து கொண்டு சிரமப்பட வேண்டாம்.
5 நாட்களுக்கு முன் பிறந்த பெண் குழந்தையை தத்து கொடுத்தால் ரூ2லட்சம் பெற்று தருவதாக ஆசை வார்த்தை கூறி உள்ளார். இதற்கு மயங்காத தினேஷ் திருச்செங்கோடு நகர போலீசில் தகவல் கொடுத்துள்ளார். புகாரை பெற்று கொண்ட நகர போலீசார் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் உமா உத்தரவுப் படியும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா அறிவறுத்தலின் படியும், குழந்தை விற்பனைக்கு புரோக்கராக செயல் பட்ட லோகாம்பாளை பிடித்து விசாரித்தனர்.
விசாரனையில் லோகாம்பாள் போலீசாருக்கு கொடுத்த வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது என் பெயர் லோகாம்பாள் என்னை லோகா என்று கூப்பிடுவார்கள் எனது சொந்த ஊர் கரூர் மாவட்டம் வெங்கமேட்டில் உள்ள காயத்ரி நகராகும் எனது அப்பா பெயர் தனபால் கடந்த நாலு வருடத்திற்கு முன் உடல்நிலை சரியில்லாமல் நடந்து விட்டார் எனது அம்மா சுந்தரி என்னுடன் பிறந்தவர் முருகேசன் என்ற தம்பி உள்ளார் எனது அம்மா எனது தம்பியின் குடும்பத்தினுடைய கரூரில் வசித்து வருகிறார்.
நான் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளேன் கடந்த 20 வருடத்திற்கு முன்பு தமிழ்ச்செல்வன் என்பவரை காதலித்து பெற்றவர்கள் சம்பதத்தின்படி திருமணம் செய்து கொண்டேன் எனது கணவர் தறி கூலி வேலை செய்கிறார்.எங்களுக்கு தனுசியா என்ற மகளும் பூபதி என்ற மகனும் உள்ளனர் சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள வெள்ளாண்டி வலசை சேர்ந்த எனது கணவர் குடும்பத்துடன் குமாரபாளையத்தில் தங்கி தறி வேலை செய்து வந்தோம்.
எனது கணவர் சரியாக வேலைக்கு செல்லாததால் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு கணவரை பிரிந்து நான் குமாரபாளையத்தில் தனியாக வசித்து வந்தபோது பாலாமணி என்பவர் பழக்கமானார். என் குடும்ப சூழ்நிலையை வறுமையைச் சொன்ன போது தான் குழந்தைகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வருவதாகவும் அதில் நல்ல லாபம் கிடைக்கும் என கூறினார்.

நான் அவரிடம் தொழில்நுட்பத்தை கற்றுக்கொண்டு திருச்செங்கோடு சாணார்பாளையத்தில் என் அத்தை வசந்தா வீட்டில் வசித்து வந்தேன் எனக்கு போதிய வருமானம் இல்லை என்பதால் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கரூர் வெங்கமேடு சேர்ந்த தனம் என்பவரது பெண் குழந்தைக்கு வாங்கி 3 லட்சத்துக்கு பெருந்துறை சேர்ந்த ஒருவருக்கு விற்று விட்டேன் எனக்கு அதில் 30 ஆயிரம் கமிஷனாக எடுத்துக் கொண்டேன்.
பின்னர் கடந்த எட்டு மாதத்திற்கு முன்பு தோக்கவாடியில் உள்ள செல்வம் என்பவருக்கு பெண் குழந்தையை 2 லட்சத்து 80 லட்சத்து 80 ஆயிரத்திற்கு தென்காசியில் உள்ள ஜானகி என்ற புரோக்கரிடம் பெற்றேன். இதில் 20 ஆயிரம் கமிஷன் பெற்றேன். பின்னர் பாலாமணி மூலம் பழக்கமான செல்வி என்ற புரோக்கர் மூலம் கொல்லிமலையை சேர்ந்த ஒருவரது ஆண் குழந்தையை குன்னத்தூரை சேர்ந்த சசி என்பவருக்கு மூன்று லட்சத்து 20 ஆயிரத்துக்கு விற்றேன். இதில் கமிஷனாக 30000 பெற்றேன்.
பின்னர் ஆறு மாதத்திற்கு முன்பு மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த உன்னி என்பவருக்கு தெரிந்தவரின் ஆண் குழந்தையை திருநெல்வேலியை சேர்ந்த கிளாரிடா என்பவருக்கு மூன்று லட்சத்து ஐம்பதாயிரத்துக்கு விற்றேன். அதில் கமிஷனாக 50,000 வாங்கினேன்.
Leave a Reply
You must be logged in to post a comment.