பாஜக மாநில மீனவர் அணி செயலாளர் மீது கொலை முயற்சி வழக்கு..!

2 Min Read

குமரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரை அந்த கட்சியின் மாநில மீனவர் அணி செயலாளர் ஆள் வைத்து அரிவாளால் வெட்டி கொலை‌ செய்ய முயன்ற விவகாரம். பாஜக மாநில மீனவச் செயலாளர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை.

- Advertisement -
Ad imageAd image

கன்னியாகுமரி மாவட்டம், அடுத்த குளச்சலை அடுத்த புதூர் மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜஸ்டிலின் கண்ணன். இவர் தமிழக பாஜக கட்சியின் செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். இவருடைய ஊரில் நடந்த கிறிஸ்தவ ஆலய விழாவில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு தகராறாக மாறி உள்ளது. இது சம்பந்தமாக மண்டைக்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

கருங்கல் காவல் நிலையம்

இந்த புகாரின் பேரில் மண்டைக்காடு போலீசார் விசாரணை நடந்த நிலையில் இதில் மற்றொரு தரப்பிற்கு ஆதரவாக கன்னியாகுமரி மாவட்டம், அடுத்த தாழக்குடி பகுதியை சேர்ந்த தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில மீனவர் அணி செயலாளர் சகாயம் தலையிட்டு பேசியதாக தெரிகிறது. இதில் ஜஸ்டிலின் கண்ணனுக்கும் சகாயத்திற்கு இடையே தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜஸ்டிலின் கண்ணன் கருங்கலை அடுத்த பாரியக்கல் கடற்கரைக்கு தனது மோட்டார் பைக்கில் வந்துள்ளார்.

அப்போது மோட்டார் பைக்கில் வந்த இவரை 3 பேர் கொண்ட மர்ம கும்பல் வழிமறித்து அரிவாளால் வெட்டி காயப்படுத்தி உள்ளனர். இவரை வெட்டிய மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிஓடினர். இதில் படுகாயம் அடைந்த இவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை

இது குறித்து கருங்கல் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து கருங்கல் போலீசார் இது சம்பந்தமாக படுகாயம் அடைந்த ஜஸ்டிலின் கண்ணனிடம் வாக்குமூலம் பெற்றதில் தமிழக பாரதிய ஐனதா கட்சியின் மாநில மீனவரணி செயலாளராக செயல்படும் சகாயம் தான் தன்னை ஆட்களை வைத்து வெட்டினார் என வாக்குமூலம் கொடுத்ததை தொடர்ந்து தமிழக பாரதிய ஜனதா கட்சியில் மாநில மீனவர் அணி செயலாளர் சகாயம் மற்றும் 3 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக பாரதிய ஐனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரை அந்தக் கட்சியின் மாநில மீனவர் அணி செயலாளரே ஆட்களை விட்டு வெட்டி படுகொலை செய்ய முயன்ற சம்பவம் குமரி மாவட்டத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Share This Article

Leave a Reply