புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக குழந்தைகளுக்கு சாக்லேட், பிஸ்கெட், செல்போன் கொடுத்து கடத்த முயற்சி செய்வதாக தகவல் பரவி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக குழந்தைகள் கடத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் இருந்து வந்தனர். இந்த செய்தி முற்றிலும் தவறான தகவல். புரளியை கிளப்பி வருகின்றனர் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை யாராவது கடத்தி சென்று விடுவார்களோ என்ற அச்சத்தில், அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர் வந்த பின்னரே பிள்ளைகளை அனுப்ப வேண்டும் என பெற்றோர்கள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் பாகூர் பகுதியில் இரண்டு குழந்தைகளை வாயில் துணி வைத்து கடத்த முயன்றதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதனிடையே கடந்த 2-ம் முத்தியால் பேட்டை சோலை நகரை சேர்ந்த வயது சிறுமி கடத்தப்பட்டார்.

பிறகு அவர் நேற்று சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலாப்பட்டு பகுதியில் பள்ளி முடித்து வீட்டுக்கு சென்ற 3 சிறுமிகளுக்கு சாக்லேட் கொடுத்து 2 பெண்கள் ஆட்டோவில் கடத்த முயற்சி செய்துள்ளனர். அப்போது சிறுமிகள் கூச்சலிட்டதால் அவர்கள் ஆட்டோவில் தப்பி சென்று விட்டனர்.
அதனை தொடர்ந்து நேற்று மாலை மேட்டுப்பாளையம் கலைவாணர் நகரில் டியூஷன் முடித்து வீட்டுக்கு சென்ற சிறுவனுக்கு மர்ம நபர் ஒருவர் சாக்லேட் கொடுத்து கடத்த முயற்சி செய்துள்ளார்.

சிறுவன் சாக்லேட் வாங்காமல் மறுத்த போது அவரை குண்டு கட்டாக தூக்க முயன்ற போது சிறுவன் கூச்சலிட்டதால் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
தற்போது சிறுவர், சிறுமிகள் கடத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளிவரும் நிலையில் அதற்கு ஏற்றார்போல் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக குழந்தைகள் கடத்த முயலும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில் கூறுகையில்;-
சில மர்ம நபர்கள் குழந்தைகளுக்கு சாக்லேட்டில் மயக்க மருந்து கொடுத்தும், செல்போனில் கேம் விளையாட்டை காண்பித்தும் கடத்த முயற்சி செய்வதாக புகார்கள் வருகிறது. இது சம்பந்தமாக விசாரணை நடத்தி வருகிறோம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பத்திரமாக பார்த்து கொள்ள வேண்டும்.

புதுச்சேரியில் சாக்லேட், பிஸ்கெட், செல்போன் கொடுத்து குழந்தைகளை கடத்த முயற்சி
அடையாளம் தெரியாத நபர்கள் சாக்லேட், பிஸ்கெட் உள்ளிட்ட திண்பண்டங்கள் மற்றும் செல்போன் ஆகியவற்றை கொடுத்தால் வாங்ககூடாது. மர்ம நபர்கள் யாராவது கூப்பிட்டால் அவர்களுடன் செல்லக்கூடாது CT CIT குழந்தைகளுக்கு பெற்றோர்கள் அறிவுரை வழங்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
இருப்பினும் புதுச்சேரியில் அடுத்தடுத்து குழந்தைகள் கடத்தப்படுவது, கடத்த முயற்சி செய்வது உள்ளிட்ட தகவல்கள் பரவி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே குழந்தைகள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் யார்? எங்கிருந்து வருகின்றனர்.

குழந்தைகளை எங்கு கடத்தி செல்கின்றனர் என்ன செய்வார்கள்? சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தி உண்மையா? என காவல்துறையினர் பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
Leave a Reply
You must be logged in to post a comment.