கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே சலூன் கடை உரிமையாளர் மீது தாக்குதல், தாக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன.
கன்னியாகுமரி மாவட்டம், அடுத்த இரணியல் அருகே வில்லுக்குறி வெள்ளச்சிவிளை பகுதியை சேர்ந்த ரெதீஸ்குமார் வயது (33), இவர் சலூன் கடை நடத்தி வருகிறார். இவருக்கு அதேபகுதியை சேர்ந்த மோகன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

இவர்கள் இருவருக்கும் அடிக்கடி பிரச்சனைகளை ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் இருவருக்கும் பகை ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு ரெதீஸ்குமார் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க வெள்ளச்சிவிளை தேசியநெடுஞ்சாலை பகுதிக்கு வந்துள்ளார்.
அப்போது, அங்கு நண்பர்களுடன் மறைந்து நின்ற மோகன் திடீரென ரெதீஸ்குமாரை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த வாகனம் ஓட்டி தனது செல்போனில் விடியோ பதிவு செய்து தேசிய நெடுஞ்சாலை பாதுகாப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்த ரெதீஸ்குமாரை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அவர் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது சலூன் கடை உரிமையாளரை 3 பேர் சேர்ந்து கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் அனைவரும் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.