தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பணம் எடுக்கும் ஏ டி எம் இயந்திரங்களை கொள்ளையடித்து வரும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றது.
கடந்த சில நாட்களுக்கு முன் திருவண்ணாமலை வட நாட்டு இளைஞர்கள் கொள்ளையடித்த சம்பவம் பின்னர் கைது நடவடிக்கை என நடந்தது.
அதற்குள்ளாகவே வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்தின் மையப்பகுதியில் இயங்கி வரும் ஏடிஎம் கொள்ளை முயற்சி பொதுமக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது .

வெள்ளக்குட்டையில் ஒரு தனியார் ஏடிஎம் (இந்தியா 1ஏடிஎம்) கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது, இந்த ஏடிஎமில் நேற்று நள்ளிரவில் மர்மநபர் கடப்பாரை வைத்து ஏடிஎம்யை உடைக்க அடையாலயம் தெரியாத மார்ப நபர்கள் முயற்சி செய்து கொண்டு இருந்தனர். அப்பொழுது அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த ஆலங்காயம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் காவலரை கண்டதும் ஏடிஎம் கொள்ளையில் ஈடுப்பட்டிருந்த மர்மநபர் கடப்பாரையை அங்கேயே விட்டு விட்டு தப்பியோடி உள்ளனர்.
உடனடியாக இதுகுறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து சீசீடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து ,இந்த குற்றத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்து பின்னர் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளில் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டார்.
Leave a Reply
You must be logged in to post a comment.