பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்த 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு . பீகாரில் தொடரும் கள்ளச்சாராய மரணங்கள்.
பீகாரில் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மது விலக்கு அமலில் இருந்தபோதிலும் சிலர் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்த்து விற்பனை செய்து வருகின்றனர்.
இதுபோன்ற கள்ளச்சாராயத்தை வாங்கி குடிப்பவர்களில் பலர் உயிரிழந்து வரும் சம்பங்களும் அரங்கேறி வருகிறது. பீகார் சரண் மாநிலத்தில் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் கள்ளச்சாராயம் அருந்திய 70 கும் மேற்பட்டோர் பரிதாபமாக இறந்தது துக்கம் மறைவதற்குள்ளாகவே மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது .
இந்நிலையில், பீகார் மாநிலத்தின் கிழக்கு சம்பரன் மாவட்டம் துர்குலியா மற்றும் பஹர்பூர் கிராமத்தை சேர்ந்த சிலர் நேற்று கள்ளச்சாராயம் குடித்துள்ளனர். இதில் பலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் இன்று 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிக்சிசை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்தது யார்? இந்த சம்பவத்திற்கு பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல்துறை விசாரணை ஒரு பக்கம் இருக்க , கள்ளச்சாராய விற்பனையை பீகார் மாநிலத்திலிருந்து முற்றிலுமாக ஒழிக்கவேண்டும் என்றும் , இது போன்ற மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே அம்மாநில மக்களின் பிரதான கோரிக்கையாக இருக்கிறது .
Leave a Reply
You must be logged in to post a comment.