தஞ்சையில் வடிகால் வாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு முறையாக தூர்வார வேண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்.

1 Min Read
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுக்கா, வெண்டையம்பட்டி கிராமங்கத்தில் உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்கால் உள்ளது. இதன் மூலம் செங்கிப்பட்டி வெண்டயம்பட்டி உள்ளிட்ட பகுதிகள் பாசன வசதி பெறுகின்றன.  இந்த உய்யகொண்டான் கால்வாய் திருச்சியை தலைமையிடமாக கொண்ட பொதுப்பணித்துறையின் ஆற்றுப்பாதுகாப்பு கோட்டத்தின் கீழ் உள்ளது.

- Advertisement -
Ad imageAd image

இந்நிலையில் நீர் வரத்து வாய்க்கால்களும், வடிகால் வாய்க்கால்களும் முறையாக தூர்வாரப்படுவதில்லை. குறிப்பாக வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் மழைகாலங்களில் நீர் வெளியேறாமல் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்சேதம் ஏற்பட்டு வருகிறது. கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் கடும் சேதம் ஏற்படவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விவசாயிகள் மேற்படி பெரிய ஏரியின் வடிகால் வாரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி,தூர்வாரக்கோரியும் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு கோரியும் கடந்தாண்டு டிசம்பர் 14 அன்று வெள்ள நீரில் மூழ்கிய வயல்களில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் மயங்கியவர்

அப்போது விவசாயிகளிடம் பொதுப்பணித்துறை,வருவாய்த்துறை அதிகாரிகள் கோடைக்காலத்தில் பணிகளை செய்துதருவதாக உத்தரவாதம் அளித்தனர். தற்போதுதஞ்சாவூர் மாவட்டத்தில் 20.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் துவங்கி நடைப்பெற்று வருகின்றன. இப்பணிகளின் கீழ் வெணடையம்பட்டி பெரிய ஏரியின் வடிகால் வாய்க்காலும் ரூ.24.70 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரப்பட உள்ளது.

தற்போது வடிகால் வாக்கால் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு பணிகளை மேற்கொள்ள கோரி இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.அம்மனுக்கள் மீது நடவடிக்கைகள் எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு பணிகளை மேற்கொள்ள கோரி,பல முறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர் இது வரை எந்த நடவடிக்கைகளும் இல்லை.

இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் விவசாயிகள் மாவட்டக்குழு உறுப்பினர் ஜி.ஜெயபால் தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த காத்திருப்பு போராட்டத்தில் கலிபெருமாள் மற்றும் மாரிகண்ணு என்ற இரண்டு மயக்கி விழுந்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Share This Article

Leave a Reply