இனியாவது பழங்குடி சமூக மக்களுக்கான வசதிகளையும் வாய்ப்புக்களையும் உருவாக்கிக் கொடுக்க முன்வர வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை புலியூர் கிராமத்தைச் சேர்ந்த ஶ்ரீபதி , தமிழகத்தின் முதல் பழங்குடியின நீதிபதியாகத் தேர்ச்சி பெற்றுள்ளார் என்ற செய்தி மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

நமது நாட்டின் குடியரசுத் தலைவர் பதவியை, பழங்குடியினத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு அலங்கரிக்கும் இதே காலகட்டத்தில், தனது கடின உழைப்பால், 23 வயதிலேயே நீதிபதியாகத் தேர்ச்சி பெற்றுள்ள ஶ்ரீபதிக்கு, தமிழக பாஜக சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சுதந்திரம் கிடைத்து எழுபத்தைந்து ஆண்டுகள் கடந்தும், அடிப்படை வசதிகள் இல்லாமல், அவசர மருத்துவச் சிகிச்சைக்குச் செல்லக் கூட சாலைகள் இல்லாமல், டோலி கட்டித் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டிய நிலையில், தமிழகத்தில் உள்ள பல மலைக்கிராமங்களை வைத்துக் கொண்டு, போலி சமூக நீதி பேசிக் கொண்டிருக்கும் தமிழக ஆட்சியாளர்கள், இனியாவது பழங்குடி சமூக மக்களுக்கான வசதிகளையும் வாய்ப்புக்களையும் உருவாக்கிக் கொடுக்க முன்வர வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.