- கும்மிடிப்பூண்டி வட்டம் மாநெல்லூர் ஊராட்சி சந்தபேட்டையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சுந்தர விநாயகர் ஆலய திருக்கோவில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.
தொடர்ந்து இன்று காலை 7 மணியளவில் யாகசாலை, யாத்ரா தானம், கலச புறப்பாடு, விமான கோபுர கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் மாநெல்லூர் ஊராட்சி சந்தபேட்டையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சுந்தர விநாயகர் ஆலய திருக்கோவில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகமானது கடந்த சனிக்கிழமை அன்று பல்வேறு பூஜைகளுடன் தொடங்கியது.
கொஞ்சம் இதையும் படிங்க : http://thenewscollect.com/weavers-are-protesting-to-sell-silk-cloth-to-the-tune-of-43-crore-rupees-and-to-give-bonus/
அதை தொடர்ந்து ஸ்ரீ சுந்தர விநாயகர் மூலவர் மற்றும் ஆதி விநாயகர், உற்சாக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா, ஸ்ரீ சுப்பிரமணியர் ஆகியோருக்கு பல்வேறு புனித நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை கொண்டு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. நிகழ்வின் நிறைவாக ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா, சுப்பிரமணியர் திருவீதி உலா நடைபெற்றது.
நிகழ்வில் பங்கேற்ற திரளான பக்தர்கள் மீது புனித நீரானது தெளிக்கப்பட்டது.



Leave a Reply
You must be logged in to post a comment.