தேர்தல் பிரசாரத்தை முடக்குவதே பாஜக, அமலாக்கத்துறையின் நோக்கம் – அரவிந்த் கெஜ்ரிவால்..!

2 Min Read

அமலாக்கத்துறையின் 3-வது சம்மனை நிராகரித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பிரச்சாரம் செய்வதை முடக்குவதற்காகவே என்னை கைது செய்ய வேண்டும் என ஒன்றிய பாஜக அரசு மற்றும் அமலாக்கத்துறை மீது கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

வரும் மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரத்தில் நான் ஈடுபடுவதைத் தடுக்கும் நோக்கில்தான் அமலாக்கத்துறை விசாரணைக்கு வருமாறு கடிதம் அனுப்பிக் கொண்டிருக்கிறது என்று புதுடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருக்கிறார். டெல்லி மதுபான கொள்கையின் முறைகேடு பிரச்சனை தொடர்பாக கலால்துறை அமைச்சராகவும், துணை முதல்வராகவும் இருந்த மணீஷ் சிசோடியா, அதேபோன்று ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 3 முறை சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் டெல்லி தலைமைச் செயலகம் அருகே உள்ள சிவில் லைன் பகுதியில் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்தின் முன் போலீஸ் மற்றும் துணை ராணுவ பாதுகாப்பு படையினர் ஏராளமானோர் குவிக்கப்பட்டுள்ளனர்.

அரவிந்த் கெஜ்ரிவால்

இதனால் டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற அரசியலில் பரபரப்பான சூழலில் கெஜ்ரிவால் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பேசிய வீடியோவில்; சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறையின் மூலமாக பாஜக அரசு தன்னை தொடர்ந்து மிரட்டி வருகிறது. தேர்தல் பிரசாரத்தை முடக்குவதற்காக என்னை கைது செய்ய வேண்டும் என்பது மட்டும் தான் அவர்களின் முக்கிய நோக்கமாக உள்ளது. மக்களவை தேர்தலில் பிரச்சாரம் செய்வதை தடுக்கவே என்னை கைது செய்ய பார்க்கிறார்கள். மணீஷ் சிசோடியா, சத்தியேந்திர ஜெயின், சஞ்சய் சிங் ஆகியோர் பாஜக அரசை எதிர்த்தார்கள். அதனால் தான் அவர்கள் இப்போது பாஜகவை பழிவாங்கும் நடவடிக்கையாக சிறையில் இருக்கிறார்கள். குறிப்பாக பாஜகவில் சேராதவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதன் எண்ணிக்கை ஒன்றிரண்டு கிடையாது. நாடு முழுவதும் இதே நிலைதான் நீடித்து வருகிறது. நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. அதனால் பாஜகவுக்கு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.

அரவிந்த் கெஜ்ரிவால்

மேலும் என் மீதான அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுக்கு எந்த வித ஆதாரமும் இல்லை. நான் புதிய மதுபான கொள்கை விவகாரத்தில் ஊழல் என்று குற்றச்சாட்டும் அமலாக்கத்துறை இதுவரையில் நடத்தப்பட்ட விசாரணையில் ஒரு ரூபாய் கூட பறிமுதல் செய்யவில்லை. ஆனால் வெறும் என ஊழல் என கூச்சலிட்டு வருகிறார்கள், என்ற கடும் குற்றச்சாட்டை முன்வைத்து பேசி உள்ளார்.

Share This Article

Leave a Reply