அமலாக்கத்துறை சம்மனை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தொடுத்த வழக்கு.டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

2 Min Read
அமலாக்கத்துறை

முதலைமைச்சர்கள் கைது

- Advertisement -
Ad imageAd image

அமலாக்கத்துறை கைதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இன்று அமலாக்கத்துறை சம்மனை எதிர்த்து கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் ஜார்க்கண்ட் முதலமைச்சரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவராக இருந்த ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இக்கட்சி இந்தியா கூட்டணியில் இருக்கிறது. அதேபோல கடந்த 21ம் தேதியன்று டெல்லி முதலமைச்சரும், இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். முதலமைச்சராக இருப்பவர் ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.

கெஜ்ரிவால்

பழிவாங்கும் நடவடிக்கை

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் கைது, ஆம் ஆத்மி மீதான பழிவாங்கும் நடவடிக்கை என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்திருந்தன. இந்த விவகாரத்தில் சர்வதேச நாடுகளும் தனது கருத்தை தெரிவித்திருந்தன. இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் தனது கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவின் கீழ் தன்னை கைது செய்தது தவறு என்றும், அமலாக்கத்துறை சட்டவிரோதமாக செயல்பட்டிருக்கிறது என்றும் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஸ்வரனா காந்தா சர்மாவின் ஒருநபர் அமர்வுக்கு முன்பு விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை முடிந்த நிலையில் ஏப்.09ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

வலுவான ஆதாரம்

அந்த தீர்ப்பில், “கெஜ்ரிவாலின் கைதுக்கான வலுவான ஆதாரங்களை அமலாக்கத்துறை சமர்ப்பித்துள்ளது. கைது நடவடிக்கையில் எந்த சட்ட விதிகளையும் அது மீறவில்லை. அதேபோல, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் கைது செய்தது சரிதான். மதுபான கொள்கையை உருவாக்கியதில் கெஜ்ரிவாலுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. இந்த வழக்கு ஜாமீன் பற்றியதல்ல, இது ஒட்டுமொத்த கைது நடவடிக்கையையே செல்லாது என்று அறிவிக்க கோரும் வழக்கு. முதல்வராக இருப்பதால் எந்த சலுகையும் வழங்கப்படாது” என்று கூறி, கெஜ்ரிவாலின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

அர்விந்த் கெஜ்ரிவால்

ஆம் ஆத்மிக்கு பின்னடைவு

இது ஆம் ஆத்மிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இன்று மற்றொரு வழக்கு விசாரணைக்கு வருகிறது. அதாவது அமலாக்கத்துறை கைது செய்வதற்கு முன்னர் 9 முறை சம்மன்களை அனுப்பியிருந்தது. இவ்வாறு சம்மன் அனுப்பியதே தவறு என்று அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகியிருந்தார். இந்த மனு இன்று நீதிபதிகள் சுரேஷ் குமார் கைட், மனோஜ் ஜெயின் அமர்வு முன்பு விசாரணைக்கு வருகிறது. பின்னணி: கடந்த 2021-22ம் ஆண்டு டெல்லி யூனியன் பிரதேசத்தில் புதிய மதுபான கொள்கை அறிவிக்கப்பட்டது. அதாவது டெல்லியில் மதுபான விற்பனை அரசிடம் இருந்து 4 கார்ப்பரேசன்கள் கைகளுக்கு மாறின. மொத்த மது விற்பனையில் 50% இந்த 4 கார்ப்பரேசன்கள் பகுதிகளில் நடைபெறுகிறது. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு லைசன்ஸ் தரப்பட்டது. இதில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன என்பதுதான் புகார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை 9 முறை கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியது. ஆனால், விசாரணைக்கு ஆஜராகாத கெஜ்ரிவால், டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றம் கைவிட்டுவிட்டது. இதனையடுத்து கெஜ்ரிவாலின் வீட்டில் அதிரடி ரெய்டு நடத்தி அவரை அமலாக்கத்துறை கைது செய்தது.

Share This Article

Leave a Reply