பட்டியல் இனத்தவரை கட்டி வைத்து தாக்கிய திமுக ஒன்றிய செயலாளர் கைது செய்க..!

2 Min Read
வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி

பொள்ளாச்சி அருகே கருப்பம்பாளையத்தில் பட்டியிலின மக்களை சேர்ந்த கட்டிடத் தொழிலாளியை கட்டி வைத்து கட்டையால் சரமாரியாக தாக்கிய திமுக ஒன்றிய செயலாளர் கைது செய்யக்கோரி வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி தலைமையில் காவல் நிலையம் முற்றுகை.

- Advertisement -
Ad imageAd image

பொள்ளாச்சி அருகே உள்ள கருப்பம்பாளையம் EB கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் வயது (33) கட்டிட வேலை செய்து வருகிறார். இவர் தனது வீட்டை பூபதி என்பவருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

ஆனைமலை காவல் நிலையம்

இந்நிலையில் கடந்த சில தினங்கள் முன்பு திமுக ஒன்றிய செயலாளர் கன்னிமுத்து மணிகண்டன் வீட்டுக்கு வந்துள்ளார். மணிகண்டன் வீட்டில் இல்லாததால் கருப்பம்பாளையம் திமுக ஊராட்சி மன்ற தலைவரும், மேற்கு ஒன்றிய செயலாளருமான கன்னிமுத்து மணிகண்டன் வீட்டை பூட்டி சாவியை எடுத்துச் சென்று விட்டார். இதை கேட்ட மணிகண்டனை ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வருமாறு கூறியுள்ளார். அங்கு சென்ற பார்த்த போது அவர் அங்கு இல்லாததால் மீண்டும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் அவர் அப்போது கருப்பம்பாளையம் தோட்டத்துக்கு வர சொல்லி அழைத்துள்ளார்.

அங்கு தோட்டத்து வீட்டில் இருந்த கன்னிமுத்து மது போதையில் இருந்தார்.அங்கு வந்த மணிகண்டனை அறையில் அடைத்து கைகளை கட்டி வைத்து கட்டையால் சரமரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மணிகண்டனை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் தகவல் கூறி அனுப்பி வைத்துள்ளனர்.பின்பு பொள்ளாச்சி அருகே அரசு மருத்துவமனையில் மணிகண்டனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி

இதையடுத்து கண்ணுமுத்து மீது பி சி ஆர் வழக்கு ஆனைமலை காவல் நிலைய போலீசார் காவல் துறையில் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமியிடம் முறையிட்டதின் பெயரில் ஆனைமலை காவல் நிலையம் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் பொது மக்கள் முற்றுகை யீட்டனர்.

சட்டமன்ற உறுப்பினர் கன்னி முத்து ஏன் கைது செய்யவில்லை விரைந்து செயல்பட்டு குற்றவாளியை கைது செய்ய வேண்டும் எனவும், அப்பகுதி பொதுமக்களுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை அளித்தார்,திடீரென அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொதுமக்கள் தலைமையில் முற்றுகையிட்டதால் அப்பகுதி பரபரப்பு ஏற்பட்டது.

Share This Article

Leave a Reply