கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி இவர் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். அவரது பாட்டி வீடு அதே ஊரில் உள்ள மற்றொரு வீதியில் உள்ளது. அவரது பாட்டி வீட்டிற்கு அந்த சிறுமி அடிக்கடி செல்வது வழக்கம்.
பாட்டி வீட்டின் அருகில் வசித்து வருபவர் ஆனந்தராஜ் வயது 30 திருமணம் ஆகி இரட்டை பெண் குழந்தைகள் உள்ளே நிலையில் இவர் பாட்டி வீட்டிற்கு வரும் 13 வயது சிறுமி அடிக்கடி அழைத்து ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது.
இதில் அந்த சிறுமி கர்ப்பமானார். கர்ப்பமானது தெரியாமல் தொடர்ந்து பள்ளிக்கு சென்று வந்தார். இதுகுறித்து அவர் யாரிடமும் சொல்லிக் கொள்ளவில்லை.
இந்த நிலையில் சிறுமி திடீரென வீட்டில் இருக்கும் பொழுது மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் சிறுமியை மருத்துவரிடம் அழைத்து சென்றனர். அங்குதான் அவரது பெற்றோர்களுக்கு ஒரு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அவரை பரிசோதித்த மருத்துவர் சிறுமி 7 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் சிறுமியிடம் விசாரித்தனர்.
சிறுமி கொடுத்த தகவலின் படி பெற்றோர்கள் விருதாச்சலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் ஆனந்தராஜ் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் ஆனந்தராஜ் உண்மையை ஒத்துக் கொண்டதன் பேரில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். பின்னர் நீதிபதி காவலில் வைக்க உத்தரவிட்டதன் பேரில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Leave a Reply
You must be logged in to post a comment.