விடுமுறையில் வந்த ராணுவ வீரர் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி உயிரிழப்பு .

1 Min Read
  • வேலூர் மாவட்டம், காட்பாடியை அடுத்த வள்ளிமலை பெரிய தெரு பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் ராஜாராம் (26). கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ராணுவத்தில் பணியில் சேர்ந்து தற்போது டேராடூன் பகுதியில் பணியாற்றி வந்தார்.

- Advertisement -
Ad imageAd image

கடந்த பத்து நாள்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.இந்நிலையில், ராஜாராம் வெள்ளிக்கிழமை அதிகாலை வள்ளிமலை பகுதியில் இருந்து வேலூருக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

காட்பாடியை அடுத்த விருதம்பட்டு பகுதியில் வந்தபோது சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவர் மீது மோதி ராஜாராம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

கொஞ்சம் இதையும் படிங்க: http://thenewscollect.com/tamil-nadu-vetri-kazhagam-was-recognized-by-the-election-commission/

தகவலறிந்த விருதம்பட்டு போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share This Article

Leave a Reply