மருத்துவ இளநிலை மற்றும் பல் மருத்துவர் படிப்பிற்கான தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் நீட் தேர்வு இன்று மதியம் தொடங்குவதை ஒட்டி தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் மதியம் 12 மணி அளவில் தேர்வு மையத்திற்கு முன் திரண்டனர்.
அரியலூர் மாவட்டத்தில் நீட்தேர்வு எழுத 3 தேர்வு மையங்கள் அமைக்கபட்டுள்ளது. அரியலூர் மான்போர்ட் மெட்ரிக்குலேசன் பள்ளி, கீழப்பழூவூர் அருகேயுள்ள விநாயகா கல்லூரி, தாமரைக்குளம் வித்யா மந்தீர் பள்ளியிலும் நீட்தேர்வு மையங்கள் அமைக்கபட்டு இந்த மையங்களில் 2078 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

தேர்வு எழுதும் மாணவர்கள் தேசிய தேர்வு முகமையால் அறிவுறுத்தப்பட்டுள்ள விதிமுறைகளின் படி, கிளிப்களை கழற்றி தலைவிரி கோலமாகவும், கொலுசு, ஜெயின், மோதிரம், தோடு கழட்டி விட்டு சென்றனர். கடுமையான சோதனைகளுக்கு பிறகு அனுமதிக்கப்பட்டனர்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உடல் வெப்ப மாணியால் பரிசோதனை செய்யப்பட்டு முக கவசம் கொடுத்து அணிந்த பிறகு தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.