தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணியில் போது, சட்டவிரோதமாக மண் எடுத்து விற்பனை செய்தது தொடர்பாக, அரியலூர் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
அரியலூர் சோழபுரம் – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை NH45C அமைக்க குஜராத்தை சேர்ந்த பட்டேல் இன்பராஸ்டெக்சர் நிறுவனத்திற்கு அரியலூர் மாவட்ட ஆட்சியர் பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியிருந்தார்.
தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பகுதிகளில் உள்ள மரங்களுக்கு பாதிப்பில்லாமல், நீர் நிலைகளை அழிக்காமல், 1 மீட்டர் அளவுக்கு மட்டுமே நிலப்பரப்பில் மண் எடுக்க வேண்டும் என பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தது.
ஆனால் பட்டேல் இன்பராஸ்டெக்சர் நிறுவனம், அந்த நிபந்தனை பின்பற்றாமல்
பொன்னேரி சோழகம் ஏரி, சுத்தமல்லி ஏரி,கோவதட்டை ஏரி உள்ளிட்ட நீர் நிலைகளிலும் கீழ்நத்தம், முத்துவாஞ்சேரி, சத்தம்பாடி உள்ளிட்ட அரசு நிலங்களில் இருந்தும் 20 அடி அளவிற்கு சட்டவிரோத மண் எடுத்து விற்பனை செய்து அரசுக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, சட்டவிரோதமாக செயல்ப்பட்ட நிறுவனம் நடவடிக்கை எடுக்க கோரி அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், நீதிபதி பாலாஜி அமர்வு, தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்காக பணிகள் மேற்கொண்ட இடங்களை அரியலூர் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளி வைத்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.