அரியலூர் மாவட்டம், தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் ஏலாக்குறிச்சி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது, காரில் பயணித்தவர்கள் மோதியதில், அது இடத்தில் தஞ்சையை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தனர்.
அரியலூர் மாவட்டம், தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில், ஏலாக்குறிச்சி பிரிவு சாலை அருகே ஜல்லி ஏற்றிய லாரி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது அரியலூரில் இருந்து சென்ற கார், லாரியின் பின்னால் மோதியது. அதில் கார் மிகுந்த சேதத்துக்கு உள்ளானது.

நின்ற லாரி மீது கார் மோதி விபத்து
அப்போது காரில் பயணம் செய்த நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து அறிந்து அந்த வழியே சென்றவர்கள் உடனடியாக காரில் இருந்தவர்களை மீட்டனர். விபத்தில் தஞ்சையை மேலவீதியை சேர்ந்த குருமூர்த்தி மகன் ஈஸ்வரன் (24),

பலராமன் மகன் புவனேஷ் கிருஷ்ண சாமி (18), தேவா மகன் செல்வா ( 17), கரந்தையை சேர்ந்த விசு மகன் சண்முகம் (23) ஆகிய நான்கு பேரும் உயிரிழந்தனர்.

அரியலூரில் நடைபெற்ற ஒரு ஹோம நிகழ்ச்சிக்கு சென்று விட்டு ஊர் திரும்பிய போது விபத்து ஏற்பட்டுள்ளது. உயிரிழந்துள்ள நான்கு பேரின் உடல்களும் உடற்கூறு ஆய்விற்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நிகழ்விடத்திற்கு அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் சென்று பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார்.

திருமானூர் காவல் நிலையம் போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உறவினர்கள் கதறி கதறி அழுதது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.
Leave a Reply
You must be logged in to post a comment.