விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி சார்பில் திண்டிவனத்திற்கு சுமார் 22 கோடி ரூபாயில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் அனைத்தும் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் அங்கு நடைபெற்று வரும் பணியை அதிமுக திண்டிவனம் எம்எல்ஏ அர்ஜுனன் திடீரென ஆய்வு மேற்கொண்டார். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வரவேண்டும் என தெரிவித்தார்.
அந்த ஆய்வின் பொழுது கட்டுமானம் பணி மற்றும் ஏரியை அகலப்படுத்தும் பணியை பார்வையிட்டார். அதனை தொடர்ந்து அங்கு நடைபெற்று வரும் கட்டுமான பணிகள் தரமற்ற முறையில் நடைபெறுவதாகவும் சிமெண்ட் கலவைகள், தரமற்ற இருப்பதாகவும் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இங்கு வரவேண்டும் என்றார். இல்லையென்றால் இங்கு நடைபெறும் பணிகளை செய்ய விட மாட்டேன் என கூறி அங்கிருந்த ஊழியரிடம் பணியை நிறுத்த வேண்டும் என கூறி பணியை நிறுத்தினார். அதனை தொடர்ந்து திண்டிவனம் நகராட்சிக்கு சென்ற எம்எல்ஏ அதிகாரிகள் வராததால் நகராட்சியில் அதிமுக எம்எல்ஏ மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த ஆர்பாட்டத்தின் பொழுது எம்எல்ஏ மற்றும் அதிமுகவினர் கமிஷனர் அலுவலகத்திற்கு உள்ளே செல்ல முயன்றனர்.
அப்போது அதிமுகவினருக்கும் போலிசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவி காணப்பட்டது.
அதனை தொடர்ந்து எம்எல்ஏ கூறுகையில் நகராட்சி திண்டிவனம் புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணியில் பல லட்சம் ஊழல் நடந்துள்ளது. அங்கு கட்டப்படும் கட்டிடங்கள் தரமற்ற சிமெண்ட்போடப்பட்டு கலவைகள் உதிர்ந்து உள்ளதாகவும் மேலும் ந
கராட்சி புதிய பேருந்து நிலையத்தில் பள்ளங்களை சமம் செய்வதற்காக ரெண்டு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில்பள்ளங்களை சமம் செய்வதற்காக மணல் லோடுகளை வெளியே வாங்காமல் ஏறியில் மண்ணெடுக்கப்பட்டு பள்ளங்கள் சமம் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இதில் இரண்டு கோடி ரூபாய் மேல் ஊழல் நடந்துள்ளது. கட்டுமானப் பணியில் தற்பொழுது காங்கிரட்டுகள் சரியில்லாததால் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும். இது தொடர்பாக முழு விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.