சென்னை வடக்கு மாவட்டம், பெரம்பலூர் மாவட்டங்களுக்கு புதிய பொறுப்பாளர்களை நியமித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரம்பலூர் மாவட்டக் கழகச் செயலாளராகப் பணியாற்றி வரும் குன்னம் இராஜேந்திரன் , தனது உடல்நலக்குறைவு காரணமாக, தான் வகித்து வரும் பொறுப்பிலிருந்து விடுவித்துக் கொண்டதால், கழகப் பணிகள் செவ்வனே நடைபெற வீ. ஜெகதீசன் (நெய்குப்பை மெயின் ரோடு, வேப்பந்தட்டை & அஞ்சல், பெரம்பலூர் மாவட்டம்) அவர்கள் பெரம்பலூர் மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.
ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் மற்றொரு அறிக்கையில், சென்னை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளராகப் பணியாற்றி வரும் த.இளையஅருணா அவர்களை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக ஆர்.டி.சேகர், எம்.எல்.ஏ.,(82/பி முதல் பிரதான சாலை, திருவள்ளூவர் நகர், கொடுங்கையூர், சென்னை-118) சென்னை வடக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.
ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.