பாலியல் வழக்கில் கைதான முன்னாள் சிறப்பு டி.ஜி.பி மேல்முறையீடு வழக்கு 6ம் தேதி தீர்ப்பு..!

3 Min Read

வாதத்தை முன்வைக்க கால அவகாசம் கேட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டதோடு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி மீதான பாலியல் மேல்முறையீடு வழக்கில் 6-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்றும் நீதிமன்றம் விளையாட்டு மைதானமா? எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

- Advertisement -
Ad imageAd image

தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவருக்கு அப்போதைய சிறப்பு டி.ஜி.பியாக இருந்த ராஜேஷ் தாஸ் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பெண் அதிகாரி அளித்த புகாரின் பேரில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் இவரின் உத்தரவின் பேரில் பெண் அதிகாரியின் காரை வழிமறித்து கார் சாவியை பிடுங்கி செங்கல்பட்டு மாவட்டம், முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் ஆகியோர் மீது விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இது தொடர்பான வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி அன்று தீர்ப்பு கூறப்பட்டது. அதாவது குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜசுதாஸுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூபாய் 20 ஆயிரத்து 500 அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து இருவரும் விழுப்புரம் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

முன்னாள் சிறப்பு டி.ஜி.பி

இதை தொடர்ந்து இவ்வழக்கு விசாரணையின் போது செங்கல்பட்டு முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு தரப்பு வக்கீல்கள் ஏற்கனவே வாதிட்டு முடித்தனர். ஆனால் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் தரப்பு வக்கீல்கள் மேல்முறையீடு தொடர்பாக வாதிட ஒவ்வொரு முறையும் கால அவகாசம் கேட்டு வந்தனர். நேற்று முன்தினம் இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது ராஜேஷ் தாஸ் தரப்பு வக்கீல்கள் ஆஜராகி மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை வேறு கோர்ட்டுக்கு மாற்றும்படி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளதாக கூறியதோடு தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க அவகாசம் கேட்டனர். அதற்கு ஒரு நாள் மட்டும் கால அவகாசத்தை கோர்ட்டு வழங்கியது. இந்த நிலையில் நேற்று மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நடந்தது. அப்போது ராஜேஷ் தாஸ் தரப்பில் வக்கீல் ரவீந்திரன் ஆஜராகி தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்க அவகாசம் வழங்கும்படி முறையிட்டார். அதற்கு அரசு தரப்பு வக்கீல்கள் வைத்தியநாதன், கலா ஆகியோர் ஆஜராகி ஆட்சேபனை தெரிவித்தன.

முன்னாள் சிறப்பு டி.ஜி.பி மேல்முறையீடு வழக்கு 6ம் தேதி தீர்ப்பு

இதனிடையே ஏற்கனவே பலமுறை கால அவகாசம் வழங்கப்பட்டு விட்டது, என்பதை சுட்டி காட்டிய மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமா இனியும் கால அவகாசம் வழங்க முடியாது. உங்கள் வசதிக்கேற்ப ஒவ்வொரு விசாரணையின் போது அவகாசம் கேட்டு தேதி வாங்கிக் கொண்டு செல்கின்றனரே தவிர குறிப்பிட்ட அந்த தேதியில் ஆஜராகி ஏன் வாதத்தை முன் வைப்பதில்லை. இது என்ன நீதிமன்றமா? அல்லது விளையாட்டு மைதானமா? என்று சராமாரியாக கேள்வி எழுப்பினார். மேலும் ராஜேஷ் தாஸ் தரப்பு தங்கள் வாதத்தை முன்வைக்க கால அவகாசம் கோரி தாக்கல் செய்த மனுவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமா ஏற்க மறுத்து அம்மனுவை தள்ளுபடி செய்ததோடு இனிமேல் முறையிட்டு மனு மீதான தீர்ப்பு அடுத்த மாதம் ஜனவரி 6ஆம் தேதி வழங்கப்படும் என்று கூறினார்.

Share This Article

Leave a Reply