ஓபிஎஸ் தினகரன் சந்திப்பு குறித்து நேற்று செய்தியாளர் சந்திப்பில் எடப்பாடி கருத்து தெரிவித்திருந்தார்.அப்போது ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்தியலிங்கம் ஏன் செல்லவில்லை என கேள்வி எழுப்பியிருந்தார்.அதற்க்கு பதில் சொல்லும் விதமாக இன்று வைத்தியலிங்கம் செய்தியாளர் சந்திப்பு நிகழ்த்தினார்.அப்போது பேசிய அவர்.
ஓபிஎஸ்,டிடிவி தினகரன் சந்திப்பு நடைபெற்றது அப்போது நான் செல்லாமல் இருந்தது பற்றி எடப்பாடி பழனிச்சாமி ஏதோ கற்பனையில் பேசி வருகிறார். மாயமான் சந்திப்பதால் ஒன்றும் ஆகிவிட முடியாது என கூறியிருக்கிறார் அந்த மாயமான் இல்லையென்றால் அவர் முதலமைச்சர் ஆகி இருக்க முடியாது.
அண்ணா திமுகவை எடப்பாடி பழனிச்சாமி தனது சொத்தாக்க விரும்புகிறார். அது ஒருபோதும் நடைபெறாது. சண்டிக்குதிரை எதற்கும் உதவாது. ஓபிஎஸ், டிடிவி, சசிகலாவை தவிர்த்து அண்ணா திமுக ஆட்சிக்கு வர முடியாது. அன்றைக்கு நடைபெற்ற ஓபிஎஸ், டிடிவி சந்திப்பை 95 சதவீத அண்ணா திமுக தொண்டர்கள் வரவேற்கிறார்கள்.

நாங்கள் தான் ஓபிஎஸ், டிடிவி சந்திக்க சொன்னோம் முதல் முறை சந்திக்கும் போது கூட்டமாக சென்று சந்திக்க வேண்டாம் என்பதற்காகத் தான் ஓபிஎஸ்யை மட்டும் தனியாக சென்று சந்திக்க சொன்னோம். அதிமுக வலுமை பெற வேண்டும் ஒற்றுமைப்பட வேண்டும் ஒன்றுபட்டால் தான் உண்டு வாழ்வு என்று நாங்கள் சிந்திக்கின்றோம்.
ஆனால் காலில் விழுந்து முதலமைச்சராகி சுய லாபத்தால் பதவி மோகத்தால் இந்த கட்சியை அழிக்க நினைக்கின்றார் இபிஎஸ். அந்தக் கட்சியில் யாரும் வெளியே போகாதவாறு ஓநாய்கள் பாதுகாக்கின்றன. ஓநாய்களை ஏமாற்றி விட்டு ஆட்டுக்குட்டிகள் வெளியே வரும்.
நிச்சயமாக மிக விரைவில் சசிகலாவை சந்திப்பார் ஓபிஎஸ். எடப்பாடி அணியில் இருப்பவர்கள் கட்சி ஒன்று சேர வேண்டும் என நினைக்கிறார்கள். இன்றும் அவர் எங்களிடம் பேசி வருகிறார்கள் நிச்சயம் இது நடைபெறும்.கொங்கு மண்டலத்தில் வெகு விரைவில் திருச்சியை விட வெகு சிறப்பான மாநாடை நடத்துவோம்.
டெல்லிக்கு செல்லும் பொழுது எடப்பாடி பழனிச்சாமி ஜெயக்குமார், உதயகுமார் உள்ளிட்டோரை ஏன் அழைத்துச் செல்லவில்லை.விரைவில் கொங்கு மண்டலத்தில் ஒரு மாநாடு நடத்திக்காட்டுவோம் அப்போது தெரியும் என்றார்.
Leave a Reply
You must be logged in to post a comment.