பொன்முடி சொத்து குவிப்பு வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் மேல்முறையிட்டு வழக்கு தள்ளுபடி – ஐகோர்ட்டு உத்தரவு…!

3 Min Read
அமைச்சர் பொன்முடி

சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடி விசாலாட்சி ஆகியோரது சொத்துக்களை முடக்கியதை நீக்கும் செய்த சிறப்பு கோர்ட் உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

- Advertisement -
Ad imageAd image

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி பொன்முடி ஆகியோர் குற்றவாளி என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பை இன்று வழங்கிய நீதிபதி ஜெயச்சந்திரன் அவர்களுக்கு 3 ஆண்டு சிறை மற்றும் 50 லட்சம் ரூபாய் அபராதமாக செலுத்த வேண்டும் என்ற அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளார். இந்த தீர்ப்பினை அடுத்து பொன்முடி தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியினை ராஜினாமா செய்ய வேண்டிய நெருக்கடியில் உள்ளார் . மேலும் அவர் சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்ற , திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளது என்று அறிவித்து விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாகவும் , அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. எனினும் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த தீர்ப்பினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையிடு செய்ய பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி பொன்முடிக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கபட்டுள்ளது.

அமைச்சர் பொன்முடி

பொன்முடி மற்றும் அவரது மனைவியின் விடுதலையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்தது. திமுக கட்சியின் துணை பொதுச்செயலாளர் மற்றும் உயர் கல்வி துறை அமைச்சரான பொன்முடி கடந்த 1996-2001 திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்தார். அவர் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த அந்த கால கட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.36 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக அவர் மீதும், அவருடைய மனைவி விசாலாட்சி பொன்முடி உள்ளிட்ட குடும்பத்தினர் மீதும் 2011ல் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த வழக்கு வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு , விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டப்பட்ட பொன்முடி உள்ளிட்டோரை நிரபராதிகள் என்று வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் தீர்ப்பளித்தது.

சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடி விசாலாட்சி ஆகியோரது சொத்துக்களை முடக்கியதை நீக்கும் செய்த சிறப்பு கோர்ட் உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. தமிழ்நாட்டில் கடந்த 2006 ஆம் முதல் 2011 ஆம் ஆண்டு வரை நடந்த திமுக ஆட்சி காலத்தில் உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தவர் பொன்முடி. இந்த காலகட்டத்தில் இருவரும் இவரது மனைவி விசாலாட்சியும் வருமானத்துக்கு அதிகமாக ரூபாய் 1.72 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 2011 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் இருந்து இருவரையும் விழுப்புரம் கோர்ட்டு விடுதலை செய்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் இருவருக்கும் 3 ஆண்டு சிறை தண்டனையும் தலா ரூபாய் 50 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதற்கிடையில் இந்த வழக்கில் பொன்முடி விசாலாட்சி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யும்போது இவர்களது சொத்துக்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் முடக்கம் செய்தனர்.

ஐகோர்ட்டு உத்தரவு

இந்த முடக்கத்தை நீக்கி விழுப்புரம் சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களின் சொத்துக்களை முடக்கும் செய்ததை நீக்கி விழுப்புரம் சிறப்பு கோர்ட்டில் பிறப்பித்த உத்தரவு தவறாக இருக்கலாம். ஆனால் மேல்முறையீட்டு வழக்கில் இருவருக்கும் தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அதனால் சிறப்பு கோர்ட்டு உத்தரவு நீடிக்காது. அதனால் லஞ்ச ஒழிப்பு போலீசார் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன் என்று உத்தரவிட்டார். மேலும் அந்த உத்தரவில் பொன்முடி விசாலாட்சி ஆகியோரது சொத்துக்களை முடக்கம் செய்வதாக இருந்தால் அதற்கு இந்த உத்தரவு தடையாக இருக்காது என்றும் கூறியுள்ளார்.

 

 

 

 

Share This Article

Leave a Reply