கும்பகோணம் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை திடீர் சோதனை.

2 Min Read
  • கணக்கில் வராத ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல் . இது தொடர்பாக கோட்ட பொறியாளர் கந்தசாமியிடம் லஞ்ச ஒழிப்பு காவல்துறை விசாரணை (கைது இல்லை).

கும்பகோணம் மேம்பாலம் அருகே  நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் இன்று மாலை ஒப்பந்ததாரர்கள், உதவிப் பொறியாளர்கள், கண்காணிப்பு பொறியாளர், மற்றும் கோட்ட பொறியாளர் கலந்து கொள்ளும் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது.

- Advertisement -
Ad imageAd image

பண்டிகை காலம் என்பதால் இந்தக் கூட்டத்தில் பெருமளவு பணம் கைமாறும் என லஞ்ச ஒழிப்பு காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று மாலை 5 மணி அளவில் இந்த அலுவலகத்திற்கு வெளியே ஆங்காங்கே லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் பதுங்கி இருந்தனர்.
திருச்சியிலிருந்து நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளர் இந்த அலுவலகத்திற்கு வாகனத்தில் வந்துள்ளார் . அப்போது லஞ்ச ஒழிப்பு காவல்துறை அவரது காரை வழிமறித்து நிறுத்தி சோதனை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் ADSP ராமச்சந்திரன் தலைமையில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்திற்குள் அதிரடியாக நுழைந்து சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கும்பகோணம் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் கந்தசாமியிடம் இருந்து 46 ஆயிரம் ரூபாய் மற்றும் உதவிப் பொறியாளர்கள் ,இரண்டு ஒப்பந்ததாரர்கள் ஆகியோரிடம் இருந்து 68ஆயிரத்து 500 ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தமாக ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 500 ரூபாய் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது.
இது தொடர்பாக இந்த அலுவலகத்தின் கோட்ட பொறியாளர் கந்தசாமியிடம் லஞ்ச ஒழிப்பு காவல்துறை தீவிர விசாரணை நடத்தி இந்த பணத்திற்கு உரியக் கணக்குக் காட்ட அறிவுறுத்தியுள்ளனர். இந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனையில் யாரும் கைது செய்யப்படவில்லை என லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தெரிவித்தனர்.
கும்பகோணம் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக லஞ்ச ஒழிப்பு காவல்துறை நடத்திய  சோதனை நிறைவடைந்தது, இந்த சோதனை இப்பகுதியில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.
Share This Article

Leave a Reply