சைதாப்பேட்டையில் மீண்டும் பரபரப்பு: இளைஞர் எடுத்த விபரீத முடிவு

1 Min Read

சைதாப்பேட்டையில் சில நாட்களுக்கு முன்பு ஒரு வியாபாரி பெண்ணை வெட்டி கொலை செய்த சம்பவம் நடந்தது.  இதனை தொடர்ந்து இன்று வேலையின்மையால் இளைஞர் ஒருவர் ரயிலின் முன்பு விழுந்து தற்கொலை
செய்து கொண்டார்.

- Advertisement -
Ad imageAd image

அரக்கோணம் நங்கநல்லூரைச் சேர்ந்தவர் விஜய ராஜா ராம் இவர் பி.இ., எம்.இ., படித்துள்ளார்.இவர்  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் வங்கி வங்கியில் பணியாற்றி வந்துள்ளார். பின்னர் அந்த வேலையை விட்டுள்ளார்.இவருக்கு  கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றதுள்ளது. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக ஒரே வாரத்தில் இருவரும்  பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேர்காணலுக்கு செல்வதாகச் சொல்லிவிட்டு சென்னை கிளம்பியுள்ளார்.

அப்போது  தாம்பரத்திலிருந்து கடற்கரை நோக்கி இன்று மதியம் 3 மணியளவில் மின்சார ரயில் சைதாப்பேட்டையில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தது. அப்போது நடைமேடையில் சென்று கொண்டிருந்த அவர் திடீரென ரயிலின் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
சம்பவம் நடந்த இடத்திற்கு மாம்பலம் நிலைய போலீசார் விரைந்து வந்தனர். அவரது உடலைகைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது அவருடைய உடைமைகளைச் சோதனை செய்தபோது கிடைத்த ஆதார் அட்டையில் இருந்த தொலைபேசி எண்ணுக்கு அழைத்துத் தகவல் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில்  பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் இச்சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share This Article

Leave a Reply