சென்னை கமலாலயத்தில் முக்கிய திமுக பிரமுகர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை தான் மின்சாரத்தை தொட்டுவிட்டதாகவும் அதை பாதியில் விட முடியாது என்றும் தெரிவித்துள்ளார் .
15 நிமிட காணொளியை வெளியிட்டு பத்திரிகையாளர்களிடம் பேசிய அண்ணாமலை கரண்ட தொட்டாச்சி இனிமேல் பாதியில் விட்டுட்டு போக முடியாது திமுக கட்சியுடன் சேர்த்து இன்னும் இரண்டு மூன்று கட்சிகளின் ஊழல் பட்டியலை பாகம் 2 , 3 என்று வெளியிடப்படும் என்று தெரிவித்தார் .

குறிப்பாக இந்த தரவுகளின் முக்கியமானதாக கருதப்படும் “திமுக கட்சியின் தேர்தல் செலவுக்காக சிங்கப்பூரில் செயல்படும் ஷெல் கம்பெனி ஒன்று 200 கோடி ரூபாய் லஞ்சமாக தற்பொழுதைய முதலமைச்சர் முக ஸ்டாலினிடம் கொடுத்துள்ளது. இதனை விசாரிக்க சிபிஐயிடம் நேரடியாக நானே புகார் அளிக்க உள்ளேன் என்று தெரிவித்தார் .
மேலும் அவர் பேசுகையில் தமிழ் மக்களை தமிழ் சமுதாயத்தை எந்த விதத்திலும் உயர்த்தக்கூடிய அரசியல் இங்கு நடைபெறவில்லை மாறாக பணத்தை வாங்கிக் கொண்டு பணத்தை கொள்ளையடித்து ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை வருகின்ற தேர்தலில் எப்படி வெற்றி பெறுவது என்கின்ற அரசியல் தான் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
திமுக கட்சியை சேர்ந்த 12 நபர்களின் சொத்து மதிப்பே ஒரு லட்சத்து 31 ஆயிரம் கோடி இருக்கும் பொழுது இவர்களுடன் என்னைப் போன்ற சாமானியர்கள் எப்படி இவர்களை தேர்தலில் எதிர்த்து வெற்றிக்கான முடியும் என்ற கேள்வியை பத்திரிகையாளர்களின் முன்நிலையில் எழுப்பினார் .
Leave a Reply
You must be logged in to post a comment.