அண்ணாமலை மீது அவதூறு வழக்கு சென்னை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல்.

1 Min Read
அண்ணாமலை ஸ்டாலின்

தமிழ்நாடு முதல்வர் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை மீது சென்னை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை கடந்த மாதம் 14ஆம் தேதி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். அடிப்படை ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் பொய்யான குற்றச்சாட்டுகளை அண்ணாமலை தெரிவித்ததாக திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் 15 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லாவிட்டால் அண்ணாமலை மீது அவதூறு வழக்குகள் தொடரப்படும் என்று திமுக குறிப்பிட்டிருந்தது. 15 நாட்களுக்கு பின்னரும் அவர் மன்னிப்பு கேட்கவில்லை. இந்த நிலையில் முதல்வர் மு க ஸ்டாலின் சார்பில் சென்னை மாநகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் தேவராஜன் பாஜக தலைவர் அண்ணாமலை மீது அமர்வு நீதிமன்றத்தில் அவதூர் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
அந்த மனுவில் 2021 இல் முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்து மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருபவர் தமிழக முதல்வர் அனைத்து தரப்பு மக்களும் அவர் மீது மரியாதை வைத்துள்ளனர். இந்த நிலையில் பொதுமக்கள் முதல்வர் மீது வைத்திருக்கும் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்து வகையில் அண்ணாமலை அவதூறு கருத்துக்களை வெளியிட்டுள்ளார் அவர் பேட்டி அளித்தது தொலைக்காட்சிகளிலும் சமூக வலைதளங்களிலும் வெளியானது இதற்காகவே அண்ணாமலை உள்நோக்கத்துடன் ஒரு தனி இணையதளத்தையும் தொடங்கியுள்ளார். அதில் தனது பேட்டியை பதிவேற்றம் செய்துள்ளார் முதல்வர் தலைமையில் பல்வேறு நலத்திட்டங்கள் தமிழக மக்களுக்கு வழங்கி வரும் நிலையில் அண்ணாமலை இது போன்ற செயல்கள் முதலமைச்சரின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்துவதாகவும் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

- Advertisement -
Ad imageAd image
Share This Article

Leave a Reply