விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது; பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் தந்தை பெரியார் சிலை அகற்றப்படும் என அண்ணாமலை கூறி இருப்பதற்கு, அமைச்சர்கள் சேகர் பாபு, உதயநிதி ஆகியோர் உரிய விளக்கம் அளித்துள்ளனர்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஐ.பி.எஸ் ஆனதற்கு காரணமே தந்தை பெரியார் தான். தமிழகத்தில் என்று அனைத்து தரப்பினரும் படிப்பதற்கும் சமம் என்பதற்கு பெரியார் போட்ட விதை தான் காரணம். சமூக பற்றுள்ள அனைவரும் பெரியாரை ஏற்றுக் கொண்டுள்ளனர். உலக அளவில் பகுத்தறிவு சிந்தனைக்கு காரணமானவர் பெரியார், அவரை பற்றி பேச அண்ணாமலைக்கு எந்த தகுதியும், அருகதியும், இல்லை என அமைச்சர் பொன்முடி கூறினார்.

தமிழகத்தில் பதவி கிடைக்கும் என நினைத்து அண்ணாமலை இப்படி ஏதேதோ பேசி வருகிறார். அண்ணாமலை தன்னை திருத்திக் கொள்ள வேண்டும். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வி செயலாளருக்கு கூட அழைப்பு இல்லை. அழைப்பு இதழில் பெயரும் இல்லை. இப்பிரச்சினை குறித்து பேசிய புதுச்சேரி கவர்னர் கூட தமிழக பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கவர்னர் துணைவேந்தர் என யாருமே பேசுவதில்லை என சுட்டிக்காட்டி உள்ளார்.
கடந்த பட்டமளிப்பு விழாவிலும் யாருமே பேசவில்லை. கடந்த கால பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வித் துறை செயலாளர் மற்றும் அமைச்சர் பெயர்கள் இருக்கும். அவர்கள் மேடையில் பேசவும் செய்வார்கள். ஆனால் இப்போது யார் பெயரையும் போடுவதில்லை. யாரையும் பேசும் கவர்னர் விடுவதில்லை. அதற்கு காரணம் அவர் மட்டுமே பேச வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளார்.

இதன் பிறகு விழாவில் சிறப்பு விருந்தினர்கள் புரோ சான் சிலர் உயர்கல்வித்துறை செயலாளர் அழைக்க வேண்டும், அவரை பேசவும் அனுமதிக்க வேண்டும். இது துணைவேந்தர்களிடம் நீங்களே விழாக்களை நடத்துங்கள் என, நாங்கள் சொல்லும் அளவிற்கு, கவனம் நடந்து கொள்ள மாட்டார் என நம்புகிறோம் என இவ்வாறு அவர் கூறினார்
Leave a Reply
You must be logged in to post a comment.