பழங்குடியின பெண்ணை காலனியால் அடிக்கும் திமுகவைச் சேர்ந்த நபரின் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்து ழங்குடியின சமூக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலையுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் ட்வீட்டில் தெரிவித்திருப்பதாவது,”தஞ்சாவூர் மாவட்டம் குறிச்சி பகுதியில், திமுக ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் தீபலட்சுமியின் கணவர் சுவாமிநாதன் என்பவர், பழங்குடியின சகோதரி ஒருவரை காலணியால் அடிக்கும் காணொளிச் செய்தியைக் கண்டு மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்.
வீண் விளம்பரத்திற்காக, பொய்களும் புரட்டுகளுமாய், போலி சமூகநீதி பேசிக்கொண்டு, அதிகார மமதையில், பட்டியல், பழங்குடியினர் சமூக மக்களுக்கு எதிராக திமுகவினர் நடத்தி வரும் வன்முறையின் நீட்சியே இது போன்ற தாக்குதல்கள்.
மேலும் இது போன்ற வருந்தத்தக்க நிகழ்வுகள் நடக்காத வண்ணம் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், பட்டியல், பழங்குடியின சமூக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும்
பாஜக சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.