தமிழகத்தில் திமுக பாஜக கட்சியினரிடையே பெரும் பணிப்போர் நடந்து வருகிறது.தினம் தினம் திமுக பாஜக அறிக்கை போரும் நடந்து வருவதை நாம் அன்றாடம் பார்த்து வருகிறோம்.இதற்கிடையில் பாஜக வில் உள்ள சுப்பரமணியசாமி ஒரு பக்கம் அண்ணாமலையை விமர்சித்தது வேறு என பாஜக வில் தற்போது ஒரு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் கோவை ராம் நகர் பகுதி அரசு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பாஜக தேசிய மகளிர் அணித் தலைவியும், எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசன் கலந்துகொண்டார்.
இதன் பிறகு வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ‘8 முதல் 12ம் வகுப்பு மாணவிகளுக்கு ரத்தசோகை, சர்க்கரை பரிசோதனை முகாம் கோவை தெற்குத் தொகுதியில் துவங்கியுள்ளோம். மாணவிகள் பரிசோதனை செய்து கொள்ளலாம். மாணவிகளுக்கு நோய் இருப்பது கண்டறியப்பட்டால் சிகிச்சை அளிக்க முயற்சி எடுக்கப்படும்.

தமிழக முதல்வர் தொடர்ந்து மோடி பயப்படுகிறார் என சொல்வது முதல்வரின் கற்பனைதிறனை வெளிப்படுத்துகிறது.தமிழகத்தில் நாள்தோறும் டாஸ்மாக் பிரச்னை,கொலை,கொள்ளை, சட்டம் ஒழுங்கு, லஞ்சம், ஊழல் போன்றவை குறித்து முதல்வர் சிந்திக்க வேண்டும். இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழக ஆளுநர் குறித்து குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதி இருப்பது முழுவதும் கற்பனை மற்றும் உண்மையில்லாத விஷயங்கள் தான்.
தமிழ்நாட்டில் நடைபெறும் ஒவ்வொரு பிரச்னைக்கும் ஆளுநர் உரிய பதில் கொடுப்பதால் முதல்வருக்கு கோபம் வருகிறது. திமுக வினர் யாராக இருந்தாலும் மேடை நாகரீகம் தெரியாமல் பேசக்கூடியவர்கள்தான் திராவிட தலைவர்கள்.ஆளுநர்கள் அரசியல் பேசுவது என்பது அவர்கள் வரம்பை மீறிப் போவதில்லை.அதையே ஒரு பிரச்சனையாக தொடர்ந்து பேசி வருவது முறையல்ல.
இடையில் சிலர் பாஜக கட்சிக்குள்ளே குழப்பம் விளைவிக்கும் நோக்கத்தோடு ஏதேதோ சொல்லி வருகிரார்கள்.எனக்கும், அண்ணாமலைக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.ஆனால் எங்களுக்குள் ஏதோ பிரச்சனை இருப்பது போலவே பிரச்சனையை பேசி வருவதுடன் குழப்பம் விளைவித்து வருகின்றனர்.நானும் அண்ணாமலையும் அக்காவும் தம்பி போல் சேர்ந்து கட்சியை வளர்த்து வருகிறோம்.இந்த நிலையில் கோவை பாராளுமன்ற தொகுதியில் வேட்பாளரை நிறுத்துவது குறித்து கட்சி முடிவு செய்யும்’ என்றார்.
Leave a Reply
You must be logged in to post a comment.