Andippatti – கோவில் திருவிழாவில் சாமி சிலையின் தலை துண்டிப்பு..!

1 Min Read

ஆண்டிபட்டி அருகே கோவில் திருவிழாவில் சாமி ஊர்வலத்தின் போது ஒரே சமூகத்தை சேர்ந்த இரண்டு பிரிவினரிடைய இருந்த முன்விரோதம் காரணமாக ஒரு பிரிவினர் சாமி சிலையின் தலையை துண்டாக்கி சேதப்படுத்தப்படுத்தியதால் பரபரப்பு.

- Advertisement -
Ad imageAd image
இரண்டு பிரிவினரிடைய இருந்த முன்விரோதம்

தேனி மாவட்டம், அடுத்த ஆண்டிபட்டி வைகை அணை சாலையில் உள்ள சீதாராம்தாஸ் நகர் பகுதியில் அமைந்திருக்கும் முத்தாலம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் சாமி ஊர்வலம் நடைபெற்றது.

இதில் அப்பகுதியில் இருந்த ஒரே சமூகத்தை சேர்ந்த இரண்டு பிரிவினரிடையே இருந்த முன் விரோதம் காரணமாக ஒரு பிரிவை சேர்ந்த சிலர் சாமி சிலை ஊர்வலத்தின் போது வழிமறித்து வாக்குவாதம் செய்து சாமி சிலையில் தலைப்பகுதி உள்ளிட்டவற்றை அடித்து சேதப்படுத்தினார்கள்.

கோவில் திருவிழாவில் சாமி சிலையின் தலை துண்டிப்பு

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பினர் வாக்குவாதம் செய்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதை அடுத்து அங்கு வந்த ஆண்டிப்பட்டி காவல்துறையினர் சாமி சிலையை சேதப்படுத்தியதாக 2 பேரை அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருவதோடு போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை அங்கிருந்து கலைந்து செல்ல வைத்தனர்.

ஆண்டிப்பட்டி காவல்துறையினர்

கோவில் திருவிழாவின் சாமி ஊர்வலத்தின் போது முன் விரோதம் காரணமாக சாமி சிலையின் தலைப்பகுதி உள்ளிட்டவை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் காவல்துறையினர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Share This Article

Leave a Reply