கோயம்புத்தூர் விழாவை முன்னிட்டு, மாநகரில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடத்தப்பட்டு வரும் கலைத்தெரு (Art street) நிகழ்ச்சி கோவை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று உள்ளது.கோயம்புத்தூர் விழாவை முன்னிட்டு, மாநகரில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். கடந்த ஆண்டு இந்த விழாவில் நடைப்பெற்ற கலைத்தெரு (Art street) நிகழ்ச்சி கோவை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன்படி இந்த ஆண்டும் கலை தெரு (Art street) துவங்கி உள்ளது. இந்த நிகழ்ச்சியானது சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்கள் நடைபெற உள்ளன.

கோயம்புத்தூர் ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெறும் இந்நிகழ்வில் கோவை மாவட்டத்தில் உள்ள கலைஞர்கள் அவர்களது கலைபடைப்புகள் இங்கு காட்சிபடுத்த உள்ளனர். நேற்று சனிக்கிழமை காலை 10 மணி அளவில் துவங்கிய இந்நிகழ்வை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மற்றும் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.இந்த நிகழ்ச்சி இரண்டு நாடகள் நடைப்பெறுகிறது. நேற்று ( சனிக்கிழமை ) , இன்றும் ரேஸ் கோர்ஸ் ஸ்கிம் சாலையில் நடைபெறுகிறது. இந்த ஆண்டு, 100க்கும் மேற்பட்ட கலைஞர்கள் அவர்களது கலைப்படைப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர். கோவை மாநகர மக்கள் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் மணல் ஓவியங்கள், புராண உருவங்களின் சுவரோவியங்கள், கையால் செய்யப்பட்ட தலைகீழ் கண்ணாடி, ரெட்ரோ ஓவியங்கள் , பிச்சுவாய் பெயிண்டிங், கேலிகிராபி, 3டி மாடலிங், காமிக் ஸ்ட்ரிப், குரோச்செட், களிமண் கலை, மட்பாண்டங்கள், மூங்கில் கூடை போன்ற பல்வேறு வகையான கலை படைப்புகள், கிரியேட்டிவ் கேலிகிராபி, 3-டி மோல்ட்ஸ் மற்றும் , குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர்களின் உருவப்படங்கள் மற்றும் பலவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் குழந்தைகளுக்கான ஓவிய பயிற்சி பட்டறையும் நடத்தப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.